பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து அதிக இடைவெளியில் பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்? குடும்பத்தில் தகுந்த அரவணைப்பு கிடைக்கவில்லை என்றாலும் தனக்கான உலகத்தை அழகாக அமைத்துக் கொண்டு ஆனந்தமாக வாழும் நாயகியின் வெகுளித்தனம் படிப்பவர் எவரையும் கவர்ந்து இழுக்கும்.