Deepababu
Tamil Novelist
Tamil Novelist
நான் தீபா பாபு, என்னுடைய எழுத்துப் பயணத்தை துவக்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. எனது பெயரின் பின்னால் இருக்கும் என் கணவர் தான் எனது இந்த வெற்றி பயணத்திலும் உறுதுணையாக பின்னால் நிற்கிறார்.
இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நRead More...
நான் தீபா பாபு, என்னுடைய எழுத்துப் பயணத்தை துவக்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. எனது பெயரின் பின்னால் இருக்கும் என் கணவர் தான் எனது இந்த வெற்றி பயணத்திலும் உறுதுணையாக பின்னால் நிற்கிறார்.
இதுவரை பத்திற்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி முடித்துவிட்டேன். அவற்றில் இரண்டு ஏற்கனவே புத்தகங்களாக வெளிவந்து விட்டது. "Notion Press" பதிப்பகத்தாரோடு இணைந்து மூன்றாவது நாவல் மூலம் எனது முதல் அடியை இங்கே எடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவை பொறுத்து என்னுடைய மற்ற நாவல்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து வந்துக் கொண்டிருக்கும்.
என்னுடைய எழுத்துப் பாணி, அதாவது நான் கதைகளை எழுதும் பொழுது கருத்தில் கொண்டு வடிவமைப்பது. எப்பொழுதும் என் கதைகளில் தேவையில்லாத வில்லன், வில்லி என்கிற நெகடிவ் கதாபாத்திரங்கள் இருக்காது. சமூகத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்களை, சூழ்நிலைகளை கொண்டே கதையின் போக்கு நகரும். ஒவ்வொரு கதையின் கருவும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், ஆனால் அனைத்திலும் காதலும், குடும்பமும், புரிதலும் அழகாக கொடுக்கப்பட்டிருக்கும். இரண்டு, மூன்று அத்தியாயங்களை தாண்டும் பொழுதே இது கற்பனை கதாபாத்திரங்கள் அல்ல நிஜத்தில் வாழும் மனிதர்கள் என்று நீங்கள் மறக்கும் அளவிற்கு கதை உங்களை ஆழ்ந்து உள்ளிழுத்துக் கொள்ளும். அவர்களுக்காக நீங்கள் மகிழ்வீர்கள், நகைப்பீர்கள், வருந்துவீர்கள் ஆகமொத்தம் அவர்களோடு ஒன்றாக பயணித்து ரசித்து படிப்பீர்கள்.
இது பல வாசகர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த நெகிழ்ச்சியான வார்த்தைகள். நான் எழுதும் தமிழ் நடையை வெகுவாக ரசிப்பவர்கள், உங்களது கதையை முடிக்கும் பொழுது மனதில் தோன்றும் பாசிட்டிவ் எனர்ஜியை மறுப்பதற்கில்லை என்று பாராட்டவும் செய்திருக்கிறார்கள்.
Read Less...