வாழ்க்கையில் அனைவருமே பல துயரங்களைத் தாங்கும் இதயங்கள். அவர்களின் மனதை உடைக்காமல் ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்க்கையை உணர்த்தும் பாடங்களை வரிகளாகவும் கவிதையாகவும் வாசிப்பவரை வேறு உலகிற்குக் அழைத்து செல்லும்.
இவர் பெயர் மு.ஹர்ஷினி. கவிதையே இவரின் உயிர் மூச்சு. சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளர் என்ற விருதுகள் பெற்றுள்ளார். தனது பயணத்தின் போது அதிக கவிதை எழுதுவார். உணரமுடியாத உணர்வுகளை இவரின் கவிதை சொல்லால் உணரமுடியும். இதுவரை ஐந்து நூல்கள் வெளியிட்டுள்ளார். இது ஆறாவது மேலும் பல நூல்களை வெளியிடுவார் என்பதில் ஐயம் இல்லை.