தனி மனித அனுபவ உணர்வுகளிலிருந்தே நல்ல எழுத்து தோன்றுகிறது. லிபிய நாட்டு பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர். சுவாமிதாசன் பிரான்சிஸ், மகா மணல் சமுத்திரம் என்ற இந்த புதினம் விவரிக்கும் சம்பவங்களின் நேரடி சாட்சி. எனவே, அவரது லிபிய வாழ்வின் அனுபவ வெளிச்சத்தில் ஆழமான மன வேதனையோடு இந்தப் புதினம் எழுதப் பட்டுள்ளது. நம்பிக்கை, ஆசை, அச்சம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்ற அத்தனை மனித உணர்வுப் பரிமாணங்களின் அழகான ஒரு கலவையாக இந்தப் புதினம் அமைந்திருக்கிறது. புத்தகத்தின் இறுதியில், இந்தியாவில் இருந்து மறுபடியும் லிபிய பல்கலைக் கழகத்தில் வேலையில் சேர வரும் பேராசிரியராக நாவலாசிரியரே தோன்றுகிறார்.
பொதுவாக, ஒரு சிறிய நாவல் இதைப் போல ஆழமான தாக்கத்தை, வாசகன் மனதில் ஏற்படுத்துவதில்லை. யதார்த்தம் என்னவென்றால், ஒருபக்கம் கூட விடுபட்டு விடாமல் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை நான் வாசித்து முடித்தேன். தொடங்கிய பிறகு முடிவு வரை நிற்காத விறுவிறுப்பான வாசிப்புப் பயணம் அது. நிச்சயமாக, மகா மணல் சமுத்திரம் ஒவ்வொரு வாசகனையும் வசீகரிக்கும். நீங்களும் வாசித்துப் பயன் பெற இதய பூர்வமாகப் பரிந்துரைக்கிறேன்.
- பேராசிரியர்.எம்.செபஸ்தியான்