ஒரு பெண்ணை வன்கொடுமை செய்து தன் அதிகாரத்தாலும், பலத்தாலும் அடிமைப்படுத்தி வைப்பது மட்டும் ஆணாதிக்கம் அல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு என்ற வார்த்தையைக் கொண்டும் ஆணாதிக்கம் செய்யப்படுகிறது. அடக்குமுறை மட்டும் அல்ல. ஒரு பெண்ணின் உணர்வுகளை அலட்சியப்படுத்துவதும் கூட ஆணாதிக்கம்தான் என்பதையும், ஆண், பெண் சமத்துவம் என்பது பேச்சாக இல்லாமல் விசாலமான பார்வையுடன் பழமையான எண்ணங்களில் இருந்து வெளிப்பட வேண்டும் என்றும், குடும்பப் பொறுப்புகள் என்பது பெண்களுக்கு மட்டுமே ஆனதல்ல. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமானது என்ற ஆழமான கருத்தையும், ஆண், பெண் சமத்துவம் என்பதை முதலில் நம் குடும்பத்தில் இருந்து துவங்குவோம் என்பதையும் மரு(று)மக வந்தாச்சு… என்ற இந்த கதை அழகாக வலியுறுத்தி இருக்கிறது.