Share this book with your friends

Mayanguvatheno Madhuravane! / மயங்குவதேனோ மதுரவனே!

Author Name: Nandhini Sugumaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வணக்கம் நண்பர்களே...

மயங்குவதேனோ மதுரவனே..! 

என்னுடைய ஆறாவது கதை.


பொதுவாகவே மனித உணர்வுகள் விசித்திரமானது. எதையும் தனக்கு மட்டும் தான் என எண்ணும் சுயநலம் கொண்டது. அவனது எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகவும், ஆசைகள் நிராசையாகவும், ஏக்கங்கள் தேடலாகவும் மாறும் போது எந்த ஒரு மனிதனும் தடம்மாறி போவதுண்டு. அவனது வாழ்க்கையும் வழி மாறுவதுண்டு. 
இக்கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இதைபோல் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர். அதை அவர்கள் எப்படி கையாண்டு, தன் வாழ்க்கைக்கான பாதையை அமைத்துக் கொள்கின்றனர் என்பதைக் காண்போம்.
சிறுவயதிலேயே நிராகரிப்பைச் சந்திக்கும் ஒருவனது வாழ்க்கைப் பயணம் இது. அவன் சந்திக்கும் மனிதர்கள், அவர்களால் உணரும் விடயங்கள், சுற்றி இருப்போரின் வாழ்வினில் நடக்கும் நிகழ்வுகள்.. அதில் அவனது பங்கென்ன? இவைதான் இக்கதையை நிகழ்வுகளாய் நகர்த்திச் செல்கின்றன.
மற்றவர்களால் அவனது வாழ்வினில் ஏற்படும் மாற்றங்களும், அவனால் மற்றவர்களது வாழ்வில் ஏற்படும் மாற்றங்களுமே இக்கதை. வாசிக்கும் பொழுது இதிலிருக்கும் ஏதேனும் ஒரு நிகழ்வை நிச்சயம் உங்களது வாழ்வினில் கடந்து வந்திருப்பீர்கள். கதையின் நாயகனாய் வருபவனை உங்களுக்கு மிக அருகில் நெருக்கமாய் உணர்வீர்கள்.

அன்புடன்.
நந்தினி சுகுமாரன்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

நந்தினி சுகுமாரன்

வணக்கம் தோழமைகளே..

    நான் நந்தினி, இல்லத்தரசி. நேரம் கடத்துவதற்காக கதைகளை வாசிக்க துவங்கி, அதில் ஆர்வம் ஏற்பட்டது. பின் அதுவே என் முழுநேர சுவாசமாகி போனது. பல எழுத்தாளர்களின் கதைகளை தேடி தேடி படித்து, தமிழையும் அதன் சுவையையும் உணர்ந்து கொண்டேன். வாசித்த கதைகளின் தாக்கத்தால் எனக்குள்ளும் கற்பனைகள் வளர துவங்கின. அதை வெளிப்படுத்தும் வழியறியாது ஆண்டுகள் கடந்து விட, தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது கற்பனை உருவங்களுக்கு, பெயர் அடையாளம் உணர்வுகள் கொடுத்து.. கதையின் மூலமாம் நடமாட விட்டுள்ளேன். உங்களுக்கும் இந்த நிழல் உருவங்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

என்றும் உங்கள்..

நந்தினி சுகுமாரன்.

Read More...

Achievements

+6 more
View All