வணக்கம் நட்புறவுகளே......
முன் ஜென்ம தேடல் நீ.. மூன்று ஜென்மங்களாக தொடரும் காதல்...
காளி தேவின் அருளால் இறவாவரம் பெற்ற மந்திர தந்திரங்கள் நிறைந்த இளவரசன் தன்னை விரும்பாத பெண்ணொருத்தியை அடைவதற்காக மூன்று ஜென்மங்களாய் பலியுடன் துரத்தும் ஓட்டமே இந்த கதை.
சக்தியின் அம்சத்துடன் பிறந்த இளவரசியாகிய நாயகி சிவா அம்சம் பொருந்திய ஜோதிடனின் மகனான நாயகனை காதலிக்கிறாள். பிறப்பிலேயே துர்சகுனங்களுடன் அவதரித்து குருவின் வழிகாட்டுதலால் தவமிருந்து இறவாவரம் பெற்ற இளவரசன் தன மக்களை கொடுங்கோல் ஆட்சி புரிகிறான்.. அண்டை நாடுகளையும் அராஜகமாய் அடிமை செய்கிறான்.. நாயகியின் மேல் மோகம் கொண்ட இளவரசன் அவளை அடைய முயலும் போது சிவனடியார் பாதுகாப்பில் உள்ள நாயகனுடன் இணைந்து இளவரசனை எதிர்க்கிறாள் நாயகி.. உடல் அழிந்தும் ஆன்மா அழியா நிலையில் துர்தேவதை துணையுடன் பகையை தீர்த்து கொள்ள காத்திருக்கிறான் இளவரசன்.. கொடியவன் பகை வென்றதா? உண்மை காதல் வென்றதா? இவர்கள் காதலை இணைக்க ஆழமான நட்பு எப்படி உதவியது என்பதை அங்கங்கு என் பாணியில் கவிதை கொண்டு கூறியுள்ளேன்..
என்றும் நட்புடன்....
லதாகணேஷ்.....
வணக்கம் நட்புறவுகளே...
நான் லதாகணேஷ். கல்லூரி காலத்தில் கனவாய் இருந்த ஆசை, திருமணதிற்கு பிறகு சிறகு முளைத்து பறந்திட முயல... என் கனவுகளுக்கும், எழுத்துகளுக்கும் என்னவரின் அங்கீகாரம் கிடைக்க... கடந்த வருடம் ஒரு பொது தளத்தில் பொழுதுபோக்கிற்கு எழுதத்துவங்கினேன்... பலரின் கருத்தும் ஆதரவும் என் எழுத்துகளுக்கு மேலும் வலுசேர்த்திட.. என் கனவை கொஞ்சம் விரிவு படுத்தி என் கதைகளை புத்தகமாய் பதிவிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன்...
மிக்கநன்றி..
என்றும் நட்புடன்..
லதாகணேஷ்..