தோல்வியை தழுவாத மனிதர்களே இவ்வுலகில் நாம் பாத்திருக்கவே முடியாது. என்ன தான் நாம் எவ்வளவு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருந்தாலும் நாம் அந்த தோல்விகளை நினைத்து வருந்தி வீட்டிற்குலேயே முடங்கிவிடப் போவதில்லை. என்றாவது ஒரு நாள் நமக்குரிய வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்ற ஒரே ஆசையிலும், எண்ணத்திலும் தான் நாம் தினமும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு சிறு தோல்வியை கண்டும் நாம் நம் வீட்டிற்குலேயே முடங்கி போய்விட்டால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவனுடைய முதல் தோல்வியிலேயே மறைந்து போகி இருக்கும்.
பல தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியின் ருசியே ஒரு தனி சுவை தான்......
இந்நூல் என்றவாது ஒரு நாள் நம்முடைய ஆசையும் நிறைவேறி விடாத என்ற கனவுடன் பயணிக்கும் பல சாதிக்க துடிக்கும் கவிஞர்களின் ஒரு ஆகச்சிறந்த படைப்பு. இந்த நூலை படிக்கும் ஒவ்வொருவரின் கனவுகளும் இப்படி தான் நம்முடைய கனவுகளும், ஆசைகளும் நிறைவேறும் என்ற ஒரு நம்பிக்கை உடன் உங்களை உங்கள் வெற்றியின் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.
எங்கள் கவிஞர்களின் எழுத்தாணியால் செதுக்கப்பட்டு உங்கள் கைகளில் தற்போது ஒரு சிற்பம் போல் உங்கள் கைகளில் தவழ்கிறது.