மனிதர்களாகிய நாம் கொடுக்கும் உருவமும், அர்த்தமும்தான் ஒரு நிகழ்வை பிரச்சனையாக எடுத்து கொள்வது.
ஒரு நிகழ்வை உணர்ச்சிபூர்வமாக அணுகும்போது அது சாதாரண நிகழ்வாக இருந்தாலும் அதற்கு கொடுக்கும் பெயர் பிரச்னை.
எந்த ஒரு நிகழ்வு க்கும் முடிவு என்பது ஒன்று உண்டு என்று கண்டிப்பாக நம்ப வேண்டும்.நம்பவில்லை என்றால் அந்த நிகழ்வுக்கு பிரச்னை என்றுதான் பெயர் சூட்ட வேண்டும்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் இல்லாதோர் யாரும் இல்லை. கல்யாணம் ஆனவருக்கும் கல்யாணம் ஆகாதவருக்கும், குழந்தை பெற்றவருக்கும் குழந்தையே பெறாதவர்க்கும், பணம் இருப்பவர்க்கும் பணமே இல்லாதவர்க்கும், வேலை இருப்பவர்க்கும் வேலையே இல்லாதவர்க்கும் பிரச்சனைகள் உண்டு