Share this book with your friends

NILACHORU / நிலாச்சோறு ஹைக்கூ கவிதைகள்

Author Name: Selvamuthu Mannarraj | Format: Paperback | Genre : Poetry | Other Details

அன்றாட வாழ்க்கையில்  நாம் காணும் காட்சியினைத்  தத்ரூபமாகப் படம்பிடித்து, அதன் அர்த்தத்தை  நம் கண்முன்னே நிறுத்தும் வல்லமைப் படைத்தவை ஹைக்கூ கவிதைகள்.

ஒரு ஹைக்கூவில் ஓராயிரம் அர்த்தங்கள் மறைந்துள்ளது என்பது மூத்த ஹைக்கூ கவிஞர்களின் கூற்று. அந்த வகையில் ஓராயிரம் அர்த்தங்களில் ஒரு அர்தத்தையாவது வாசகனுக்கு கொண்டுசேர்க்க முயற்சித்திருக்கும் இந்நூல் வரவேற்கத்தக்கது

அந்த வகையில் கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ் அவர்கள் நிலாச்சோறு  என்ற இந்நூலில் இயற்கை உறவுகள் சமூகம் மற்றும் அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை ஹைக்கூ கவிதைகளில் புகுத்தி வாசகனின் மனதை வருட செய்திருக்கும் வெளியீடே இந்த நிலாச்சோறு என்ற ஹைக்கூ கவிதை நூல்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

செல்வமுத்து மன்னார்ராஜ்

கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்  அவர்கள்  கர்நாடக  மாநிலம் கோலார் தங்கவயலில் பிறந்து வளர்ந்தவர், இவரின் தந்தை  கோலார் தங்கச்சுரங்கத் தொழிலாளி. கல்லூரிக் காலங்களில் இவருக்கு கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் இருந்து வந்தது. இவருடைய  கவிதை  சிந்தனைகளை இணையத்தளம் வாயிலாக  சமூக வலைத்தளங்களிலும் எழுத்து.காம் என்ற கவிதை வலைத்தளத்திலும் எழுதி வருகிறார் , தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கவியரங்கங்களில் பங்குகொண்டு  சிறந்த புதுக்கவிதை மற்றும் மரபுக் கவிதைகளை படைத்து பல்வேறு விருதுகளும் சான்றிதழ்களும்  பெற்றிருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது. 

மேலும் இவருடைய கவிதைகள் பல்வேறு தொகுப்புக் கவிதை நூல்களில் வெளிவந்துள்ளது. பன்னீர் தெளித்த கண்ணீர்த் துளிகள் இவருடைய  முதல் கவிதை நூலாக வெளிவந்தது. 

தற்போது  நிலாச்சோறு  எனும் ஹைக்கூ கவிதைநூல்  இவருடைய இரண்டாவது கவிதை நூலாக வெளிவருகிறது.   

Read More...

Achievements

+1 more
View All