பொறாமை என்னும் தீய குணம்
எல்லா நல்ல குணங்களும் நம்மிடம் இருந்தாலும், பொறாமை என்னும் தீய குணத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவதுடன், அவன் அருளைப் பெறுவதில் இருந்தும் நம்மை நாமே தடுத்துக் கொள்கிறோம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பொறாமை என்பது நேர்மையான வகையில் மற்றவரை விஞ்ச வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டுவதாயிருந்தால் அது வரவேற்கத்தக்கதே என்கிறார் லூதர்
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும். பொய்யினைப் போலவே பொறாமையும் மற்ற தீய குணங்களுடன் சேர்ந்தே ஒருவரிடம் குடி கொண்டுள்ளது.
செல்வம், அழகு, கல்வி, புகழ், அறிவு போன்றவற்றுள் ஏதேனும் ஒன்றோ, அல்லது பலவோ ஒருவருக்கு அதிகமாகக் கொடுக்கப்படுவது இறைவனின் அருளாகும். இது அவரின் மீது மற்றவர்கள் பொறாமை கொள்ளக் காரணமாக அமைகிறது.