இந்த புத்தகம் ஆனது நான்குமாதங்கள் செய்யவேண்டிய நடைமுறைகளை தொகுத்து உள்ளது. நீங்கள் இந்த் வசிய கலையை அடிப்படை விதிகளை இந்த புத்தகத்தின் மூலமாக எளிதாகவும் விரிவாகவும் கற்று கொள்ளலாம். காரணம் பண்டைய நடைமுறைகளில் உள்ள ரகசிய முறைகளை பற்றி மக்களுக்கு நிறைய உண்மைகள் தெரியாமலேயே போய்விட்டது அதன் காரணமாக மக்களிடத்தில் தந்த்ரா என்பது எதோ ஒரு செய்யக்கூடாத விசயமாக மக்களின் மனதில் பதிந்து விட்டது. ஆனால் உண்மைலேயில் தந்திரம் என்றால் அது நடைமுறையாகள் அல்லது பயிற்சிகள். அதாவது ஒரு விசயத்தை கற்று கொள்ளுவதற்கான வழிமுறைகள் என்று பொருள். ஆனால் மேற்கத்திய கலாச்சாரம் ஆனது எப்பொழுது இவைகளை பற்றி தெரிந்து கொண்டதோ அப்பொழுது இதன் உள்ளார்ந்த விசயங்களை பற்றிய உண்மைகள் தெரிந்து கொள்ளாமலேயே, அவர்கள் இதனை தவறான ஒன்றாக புரிந்து கொண்டு விட்டதனால், அவர்கள் இதனை பற்றி தவறாக உலகம் முழுவதும் பரவ செய்து விட்டார்கள்.
ஆனால் உண்மையில் தந்த்ரா என்பதே ஒருமனிதனின் உள்ளுணர்வின் செயல்பாடுகளை பற்றி ஆராய்ந்து அதன்மூலமாக அவன் மேலும் மேலும் உயரிய நிலையை அடைவதற்கான வழிமுறைகளை சொல்லுவது.
ஆனால் மேற்கத்திய மக்கள் இத்தனையும் இதன் முறைகளையும் பார்த்தவுடனே அவர்களின் குறுகிய பார்வைகளை கொண்டு, இதனை தவறான ஒன்றாக,
அதாவது, பாலியல் கல்வியை போதிப்பதாக, நினைத்து கொண்டு, அதில் உள்ள சூட்சமங்களை புரிந்து கொள்ளாமலேயே, அது பாலியல் கல்வியை மட்டுமே கற்று தருகின்றது என்று முடிவு செய்து, அதனை முழுமையாகவே உணர்ந்து கொள்ளாமல், நிறைய புத்தகங்களையும் மற்றும் மொழிபெயர்ப்புகளையும் உருவாக்கி, அதன் புனித தன்மையான மனிதனின் தன்மையில் இருந்து, உயர் நிலை அடைவதற்கான வழிகளை, தெரிந்து கொள்ளாமலேயே விட்டுவிட்டார்கள்.
நான் டாக்டர் ஜெகதீஷ் கிருஷ்ணன் முடித்த படிப்புகள் பி எச் டீ உளவியல், சட்டம் இளங்கலை, எம் பில் உளவியல், எம் ஏ உளவியல், எம் ஏ இந்தி, சென்னை நிஃப்ட்டில் பேஷன் டிசைனிங். மற்றும் எனக்கு ஏழு மொழிகள் தெரியும், எனக்கு ஐந்து வித மான தற்காப்பு கலைகள் தெரியும், நான் எழுபத்திற்கும் மேற்பட்ட உளவியல் பாட நூல்களை எழுதி இருக்கின்றேன், அவைகள் அனைத்தும் ஜெர்மனியில் வெளியிட பட்டு உலகம் எங்கும் விற்கப்படுகிறது. நான் எனக்கு சொந்த மாக ஒரு உளவியல் ஆலோசனை நிலையம் "நைட் ட்ராகன் தந்த்ரா கேலக்ஸி" என்கிற பெயரில் வைத்து கடந்த பத்து வருடங்களாக நடத்தி வருகிறேன். அதில் மனநல ஆலோசனை மட்டும் அல்ல, தந்திரம், தியானம், ஹைப்னோடிசம், மெஸ்மெரிஸம், போன்ற வற்றையும் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக கற்று தந்து கொண்டு வருகிறேன் அப்படியே காற்று கொண்டும் வருகிறேன். இன்னமும் நான் கற்று கொண்டே இருக்கிறேன் என் கற்றல் இது வரையில் முழுமை அடைய வில்லை.
நான் ஸ்பெயினில் உள்ள பாரசிலோனை யூனிவெர்சிட்டிக்கு மனசிதைவை பற்றிய கேள்வி தாள் தயாரிப்பதற்கு மதிப்புரை அளித்துள்ளேன்