எத்தனையோ பண்டையப் பெருமைகள் கொண்ட தமிழ் சமூகத்தின் பரவலுக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்த மொழிப் பெருமைக்கும் காரணம் மன்னர்கள் மட்டுமல்ல. இதைச் சாதிக்கக் காரணமானவர்கள் சங்க காலத்திற்கு முன் இதுவரை வரலாற்றால் உறுதி செய்ய இயலாத தமிழ் பெரு வணிகர்களே.
தொல் தமிழ் நாடு எத்தனை செல்வம் மிகுந்து செல்வமலி என்றழைக்கும் வண்ணம் வாழ்ந்தது என்பதை சான்றுகள் மூலம் இந்த புத்தகத்தில் அறிகிறோம்.
சென்ற காலத்தில் நாம் எத்தனை செல்வ செழிப்புடன் வாழ்ந்தோம் என்பதைத் தெரிந்து கொண்டால் , இப்போது எப்படி வாழ்கிறோம் , இன்னமும் சிறப்பாக வாழ வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கும்
இத்தகைய நூல்கள் நாம் தொல் தமிழ் நாட்டில் எப்படி செல்வ செழிப்புடன் வாழ்ந்தோம் என்பதை நமக்கு அறியச் செய்து நம்மை தன்னம்பிக்கை கொண்டு செல்வ மனோ நிலைக்கு மாற்றும் என நம்புகிறேன்.