Share this book with your friends

Siragugal Virithenae / சிறகுகள் விரித்தேனே

Author Name: V. Ritika | Format: Paperback | Genre : Poetry | Other Details

நொடிகள் சற்று சிந்திக்கையிலே பல எண்ணங்கள்; பல்வேறு கோணங்களில் நம் கண் முன்னும், நம் கற்பனையிலும். அதை எழுத்துக்களாய் மாற்ற ஆரம்பித்தேன் ஓர் நாள். செல்லும் பாதையெங்கும் சிரிப்பைக் கொடுக்கும் சந்தோஷமும், அன்பைப் புரிய வைக்கும் அனுபவங்களும், கண்மூடித் தனமான கோபமும், சிதற வைக்கும் சண்டைகளும், நோகடிக்கும் நோய்களும், நம்பிக்கை கொடுக்கும் பேச்சுகளும் நம்மை சற்று யோசிக்க வைக்கும் இவை அனைத்தும் எதற்கு என்பதை..


மெல்ல அடி எடுத்து வைத்தாலும் வேகமாக ஓடினாலும் நடப்பவையோ நிற்காது, நடக்கப்போவதோ வராமல் செல்லாது. அத்தகு சூழலில் சிந்திப்பவை அனைத்தும் உங்களுங்காக என் வார்த்தைகளால், உங்களிடம் என்றும் வாழ்ந்திடவே; சில பல சிந்தனைகளோடு சிறகுகள் விரிக்கின்றேன்...

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

வெ.ரித்திகா

எழுத்தும் வார்த்தையுமாய் புத்தகத்தில் பாடங்களாய் படித்து வந்தாள் . எதிர்பார்கா நேரத்தில் எழுதுகோள் என் எண்ணங்களை எழுத வைத்தது ஒரு காகிதத்திலே!! அன்று தொடங்கியது, இதுவும் அவளோடு கை கோர்த்து வர . ஆரம்பித்த நேரத்தில் நினைக்கவில்லை நினைவுகளும், நிகழ்வுகளும் ஒன்று சேர வரும் என்று . பேச்சுப் போட்டிகளும், பட்டிமன்றங்களும், கட்டுரை எழுதுதலும் அவளை மேடை ஏற்றியது அன்று ; அதன் தொடர்ச்சியாகவே அவள் கவிதைகளும் தொடங்கியது . நொடிகளை கவிதைகளாய் மாற்ற ஆரம்பித்தாள் . அவள் படிப்பும் உடன் வர ஆசையும் கை கொடுக்க,முயற்சி செய்து முன் வந்தாள் பல தடைகள் தாண்டி; அனைத்தையும் சிறகுகள் போல் சேகரித்து... பல் மருத்துவம் பயிலும் மாணவியாய் அவள் முதல் புத்தகம் இதோ!!

Read More...

Achievements

+2 more
View All