"கொரோனா நம் எல்லார் வாழ்க்கையிலும் ஒரு ஸ்பீடு ப்ரேக்கர் போட்டு இருக்கிறது. நின்றுப்போன இந்த மாதங்களில் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொள்ள நமக்கு பல வழிமுறைகள் தேவைப்பட்டன. பலர் அன்றாட உணவுக்கே திணறிய போதும் உயிருக்கு பயந்து ஒரு கதவு பின்னே இருந்தனர். அப்படி மூடப்பட்டு அவ்வப்போது திறக்க முற்பட்ட என்னுடைய கதவுதள் வெளியிட்ட தம்மாந்துண்டு வெளிச்சத்தில் விழைந்தவையே இக்கவிதைகள்"