அறம், பொருள், இன்பம் என்ற மூன்று நிலையில் அனைத்து உலகச் செய்திகளையும் கொண்டுள்ள இலக்கியப் பேழை திருக்குறளாகும். வள்ளுவர் ஈடும் எடுப்பும் அற்ற ஒரு சமுதாய சிற்பி. மக்கள் அனைவரும் ஒரே குலத்தார் போன்று வாழ வேண்டும் என்று விரும்பினார். அவர்கள் வாழ்ந்து சிறப்பு அடைவதற்கு அறமே சிறந்த அடிப்படை என்று கண்டார். கல்வி விளக்கம், கல்வி கற்பதன் நோக்கம் ,கல்வி கற்பதனால் ஏற்படும் நன்மைகள் ,கல்வியின் சிறப்பு, கல்லாததால் ஏற்படும் விளைவுகள்.