குழந்தைகள் விரும்பி கற்பதற்கு, எளிய சொற்களில் ராகத்தோடு பாடத்துாண்டும் வகையில் அமையும் பாடல்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இந்நுாலில், தொட்டில், திருவிழா, வானவில், புள்ளிமான், எறும்புகள், தாலாட்டு உள்பட பல்வேறு தலைப்புகளில், குழந்தைகளுக்கான 37 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் விரும்பும் வகையில் அமைந்திருப்பதால் தான், இந்நுாலுக்கு ‘ஊஞ்சல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நுாலிலுள்ள பாடல்களை, குழந்தைகள் ராகத்தோடு, பாடி ஆடி கற்கும் என்பது திண்ணம், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நுாலை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தால் குழந்தைகளின் மொழி வளம் மேம்படும்.