Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர். மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். மழலைக்காவRead More...
நுாலாசிரியர் கவிஞர்.பெ.பெரியார்மன்னன், சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர். சிறந்த கல்வியாளர். மழலைக்காவியம், கிள்ளைமொழி, ஊஞ்சல் ஆகிய குழந்தைகளுக்கான சிறார் பாடல் நுால்களை எழுதியவர். மழலைக்காவியம் நுாலில் இருந்து 3 கதைப்பாடல்கள் சாகித்ய அகடமி சிறுவர்கள் கதைப்பாடல் தொகுப்பு நுாலில் இடம்பெற்றுள்ளது. கிள்ளைமொழி நுாலுக்கு சிறந்த குழந்தை இலக்கியத்திற்கான விருது கிடைத்துள்ளது. இவரது பேசும் மெளனங்கள் கவிதை நுால் மற்றும் விந்தை மனிதர்கள் கட்டுரை நுாலும், இணைய வழியில் விற்பனையாகி வருகிறது.
Read Less...Achievements
‘பொம்மை’ எனும் இச்சிறுநுாலில்.. அறநெறி கற்பிக்கும் 22 அற்புதச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த படைப்பாளிகள் ரத்தினச் சுருக்கமாக தந்துள்ள அத்தனை சிறுகதைகளும் சம
‘பொம்மை’ எனும் இச்சிறுநுாலில்.. அறநெறி கற்பிக்கும் 22 அற்புதச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த படைப்பாளிகள் ரத்தினச் சுருக்கமாக தந்துள்ள அத்தனை சிறுகதைகளும் சமூக வாழ்க்கை பாடங்கள் என்றால் இது மிகையல்ல. 22 சிறுகதைகளும் ஒன்றையொன்று விஞ்சும் மகத்தானவை. வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசித்து ரசிக்க வேண்டிய சிறு நுால் என்பது உண்மை.
அர்த்தமுள்ள பழமொழிகளைத் தலைப்பாகக் கொண்டு, சிறுவர்கள் விரும்பி படித்து, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், நன்னெறி கற்பிக்கும் 16 பழமொழிக் கதைகளும், 16 கதைப் பாட
அர்த்தமுள்ள பழமொழிகளைத் தலைப்பாகக் கொண்டு, சிறுவர்கள் விரும்பி படித்து, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், நன்னெறி கற்பிக்கும் 16 பழமொழிக் கதைகளும், 16 கதைப் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சிறுவர்களுக்கான எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும், மழலைக்கவி பெ.பெரியார்மன்னன் எழுதியுள்ள இந்நூலுக்கு குழந்தைகள் விரும்பும் ‘கூட்டாஞ்சோறு’ என பெயரிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற வாழப்பாடி பகுதியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இப்பகுதியில் காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க அரசு அலுவலகங்கள், ஆராயச்சி ம
சேலம் மாவட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற வாழப்பாடி பகுதியின் வரலாறு, வளர்ச்சி மற்றும் இப்பகுதியில் காணப்படும் வரலாற்று சிறப்பு மிக்க அரசு அலுவலகங்கள், ஆராயச்சி மையங்கள், வரலாற்றுச் சின்னங்கள், கல்வெட்டுகள், கோயில்கள் குறித்த வரலாற்று தொகுப்பாக இந்நுால் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதனாலேயே, இந்நுாலுக்கு ‘ஊர் வளம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நுால், மற்ற ஊர்களைப் பற்றியும், மண்ணின் பெருமை குறித்தும் அந்தந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவணப்படுத்திடவும், ஊரின் சிறப்புகளை விளக்கும் நுால்களை வெளிடுவதற்கும் ஒரு உந்துதலாக, ஊக்கச் சக்தியாக அமையுமென்றால் இதுமிகையன்று.
இந்நுாலிலுள்ள ஒவ்வொரு கவிதையும் ஆழமாய் படித்தால், படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் பொதிகிறது. எழுத்துகள் எழுதுபவரின் திறமையை மாத்திரம் வெளிக் கொண்டு
இந்நுாலிலுள்ள ஒவ்வொரு கவிதையும் ஆழமாய் படித்தால், படிக்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தம் பொதிகிறது. எழுத்துகள் எழுதுபவரின் திறமையை மாத்திரம் வெளிக் கொண்டு வருவதாக இருக்கக்கூடாது. நிறைய எழுத்தாளர்கள் தங்கள் புலமையைக் காட்டும் நோக்கில், படிப்போருக்கு புரியாத வாசகங்களைக் கையாண்டு அலுப்பை ஏற்படுத்தி விடுவார்கள்! இந்நுாலாசிரியர் கவிஞர். பெ.பெரியார்மன்னன், முற்றாக அதிலிருந்து மாறுபடுகிறார்! கவிதைகளை இலக்கிய நயத்தோடு மாத்திரம் இவர் படைக்கவில்லை, எளிய நடையில் இனிப்பு சொட்டும் இன்பத்தமிழில் சுறுசுறுப்பான வாசிப்பாக அமைத்திருக்கிறார். இந்த பெரியாரின் கவிதைகள் நுாலில், 43 பல்துறை வித்தகர்களையும், பல துறைகளையும் பற்றியது! மழலைக்கவியிலேயே மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தை வைப்பவர், இந்த வித்தகக் கவிதைகளிலே எத்தனை வித்தையை காட்டியிருக்கிறார் என்பதை சுவைத்துப்பாருங்கள்.
பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்கள், தன்னலமற்று சேவையாற்றும் விந்தை மனிதர்கள் குறித்து மற்றவர்களும் அறிந்து கொள்வதற்கும், தற்கால மாணவர்களும், இளைஞர்களும், இவர
பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்கள், தன்னலமற்று சேவையாற்றும் விந்தை மனிதர்கள் குறித்து மற்றவர்களும் அறிந்து கொள்வதற்கும், தற்கால மாணவர்களும், இளைஞர்களும், இவர்களைப்போல நம்மாலும் சாதிக்க முடியுமென்ற தன்னம்பிக்கை பெறுவதற்கும் வழிவகுக்கும் நோக்கில், சாதனையாளர்கள், சமூக சேவகர்கள் குறித்த கட்டுரைகளை தொகுத்து ‘விந்தை மனிதர்கள்’ என்ற பெயரிலேயே நோசன் பிரஸ் இணைய பதிப்பகத்தின் வாயிலாக 2021ல் நுால் வெளியிடப்பட்டது. இந்நுால் சாதனை பெட்டகமாக, காலச்சுவடாக பதிந்ததோடு, பல்வேறு தரப்பினரின் பாராட்டுதலையும், வரவேற்பையும் பெற்றது. இதனைத்தொடர்ந்து, மேலும் பல நல்லோர்கள், சாதனையாளர்கள், சமூகப்பற்றாளர்கள், கலைஞர்கள் பலரைப் பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து, ‘விந்தை மனிதர்கள்–2’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாக இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நுாலில் இடம்பெற்றுள்ள பற்றிய கட்டுரைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பாமர மக்கள் முதல் கல்வியாளர்கள் வரை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் தாக்கத்தையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள கவிதைப்பூக்கள் என்னும் இக்கவிதை நுாலில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 100 கவிஞர்களின் கற்பனையில் உருவான அற்புதமான 100 கவிதைக
கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள கவிதைப்பூக்கள் என்னும் இக்கவிதை நுாலில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 100 கவிஞர்களின் கற்பனையில் உருவான அற்புதமான 100 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வாசிக்கும் உள்ளங்களை இந்நுாலிலுள்ள கவிதைகள் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள இக்கவிதை நுாலில் அழகுத்தமிழில் அற்புதமான 69 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் இந்நுாலில் இடம்பெ
கவிஞர். பெ.பெரியார்மன்னன் தொகுத்துள்ள இக்கவிதை நுாலில் அழகுத்தமிழில் அற்புதமான 69 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் இந்நுாலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் கவர்ந்திழுக்கும். ஒன்றையொன்று விஞ்சும் வகையில், கவிஞர்கள் தனது கவித்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.கவிதைகள் புனைய விரும்புவோருக்கு இந்நுால் ஊக்கமளிக்கும்.
முன்னோர்களின் வழியில் பழமையையும், பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாக்கும் கிராமப்புற மக்கள், இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து வரும், பல்வேறு வியப்பூட்டும் வழிபாட்டு ம
முன்னோர்களின் வழியில் பழமையையும், பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாக்கும் கிராமப்புற மக்கள், இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து வரும், பல்வேறு வியப்பூட்டும் வழிபாட்டு முறைகள் குறித்த, அபூர்வமான தகவல்கள் இந்நுாலில் இடம்பெற்றுள்ளது. பாரம்பரிய வழிபாட்டு முறைகள் குறித்து, புதுயுகத்தில் நாகரீகம், பண்பாடு, கலாச்சார மாற்றத்திற்கு ஆளாகி வரும் தற்கால சமூகமும், பல்வேறு மாற்றங்களோடு இவ்வுலகத்தை எதிர்காலத்தில் காணவிருக்கும் வருங்கால சந்ததிகளும் தெரிந்து கொள்ளும் நோக்கில், தனித்துவமான 50 கிராமியக் கோவில் வழிபாட்டு முறைகள் பற்றிய கட்டுரைகள், உரிய படத்துடன் இந்நுாலில் இடம் பெற்றுள்ளது. ஆன்மீக அன்பர்கள், வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்களென அனைத்து தரப்பினரையும் படிக்கத்துாண்டும் வகையில் இந்நுால் அமைந்துள்ளது.
மனிதநேயத்திற்கும், சமூக சேவைக்கும், சாதனைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்ல மனிதர்கள் சமூகத்தில் நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் இர
மனிதநேயத்திற்கும், சமூக சேவைக்கும், சாதனைகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் நல்ல மனிதர்கள் சமூகத்தில் நட்சத்திரங்களாக பிரகாசிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் இருப்பிடம் தெரியாமல் அமைதியாக வாழ்ந்து விடுகின்றனர். மகத்தான பல மனிதர்கள், தன்னை எவ்விதத்திலும் பிரபலப்படுத்திக்கொள்ள விரும்பாமலேயே மறைந்தும் விடுகின்றனர். தமிழகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த போற்றுதலுக்குறிய மனிதர்கள் சிலரை பற்றிய கட்டுரைகளை கொண்டதே நுால். எனவே தான் இந்நுாலுக்கு விந்தை மனிதர்கள் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.. வருங்காலத்தில் சமூகத்தை அறநெறியோடு காத்திட, வழிநடத்திட, தொண்டாற்றிட, பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரத்தை போற்றிட, இந்நுாலில் இடம் பெற்றுள்ள விந்தை மனிதர்களை பற்றி கட்டுரைகள் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஊக்கத்தை உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதும், படிப்பதற்கும், பாதுகாப்பதற்கும், மற்றவர்களுக்கு பரிசாக வழங்குவதற்கும் மிகச்சிறந்த நுாலென, வாசகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
‘பொம்மை’ எனும் இச்சிறுநுாலில்.. அறநெறி கற்பிக்கும் 22 அற்புதச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த படைப்பாளிகள் ரத்தினச் சுருக்கமாக தந்துள்ள அத்தனை சிறுகதைகளும் சம
‘பொம்மை’ எனும் இச்சிறுநுாலில்.. அறநெறி கற்பிக்கும் 22 அற்புதச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சிறந்த படைப்பாளிகள் ரத்தினச் சுருக்கமாக தந்துள்ள அத்தனை சிறுகதைகளும் சமூக வாழ்க்கை பாடங்கள் என்றால் இது மிகையல்ல. 22 சிறுகதைகளும் ஒன்றையொன்று விஞ்சும் மகத்தானவை. வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசித்து ரசிக்க வேண்டிய சிறு நுால் என்பது உண்மை.
கவிஞர். பெ. பெரியார்மன்னன் எழுதிய கவிதைகளை தொகுத்து ‘பேசும் மெளனங்கள்’ என்ற தலைப்பில் இந்நுாலை வெளியிட்டுள்ளார். இந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதை
கவிஞர். பெ. பெரியார்மன்னன் எழுதிய கவிதைகளை தொகுத்து ‘பேசும் மெளனங்கள்’ என்ற தலைப்பில் இந்நுாலை வெளியிட்டுள்ளார். இந்த கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அத்தனை கவிதைகளும் மாலையாய் கோர்த்த முத்துக்கள். எளிய வார்த்தைகளை கோர்த்து அருமையான வரிகளில் நவரசங்களையும் கவிதை வடிவில் தந்துள்ளார். இந்நுால் அனைத்து தரப்பினருக்கும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உறுதியாய் கொடுக்கும். நுாலை வாசிப்போரையும் கவிதை படைக்கத் துாண்டும் என்பது திண்ணம்.
குழந்தைகள் விரும்பி கற்பதற்கு, எளிய சொற்களில் ராகத்தோடு பாடத்துாண்டும் வகையில் அமையும் பாடல்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இந்நுாலில், தொட்டில், திருவிழா, வான
குழந்தைகள் விரும்பி கற்பதற்கு, எளிய சொற்களில் ராகத்தோடு பாடத்துாண்டும் வகையில் அமையும் பாடல்கள் பெரிதும் துணை நிற்கின்றன. இந்நுாலில், தொட்டில், திருவிழா, வானவில், புள்ளிமான், எறும்புகள், தாலாட்டு உள்பட பல்வேறு தலைப்புகளில், குழந்தைகளுக்கான 37 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகள் விரும்பும் வகையில் அமைந்திருப்பதால் தான், இந்நுாலுக்கு ‘ஊஞ்சல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நுாலிலுள்ள பாடல்களை, குழந்தைகள் ராகத்தோடு, பாடி ஆடி கற்கும் என்பது திண்ணம், குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நுாலை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தால் குழந்தைகளின் மொழி வளம் மேம்படும்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.