கவிதை எனும் ஒன்று கவிதை எழுதுபவர்களின் உணர்ச்சிப் பெருக்கு. அது கட்டுபாடுகளுக்குள் அடங்காது. எனவே “வானமெங்கும் வண்ணங்கள்” எனும் இத்தொகுப்பு நூல், கவிதை படைத்த கவிஞர்களுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட தலைப்பும் கொடுக்கப்படாமல், பல வர்ணங்களோடு அவர்களின் உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
இத்தொகுப்பு நூலில் கவிதைகள் அனைத்தும் வனப்பு மிக்கதாக அமைந்துள்ளது. இதனைப் படித்து முடித்துவிட்டு உங்கள் வாழ்வின் எண்ணங்களை வண்ணமயமாக்க வாழ்த்துக்கள்.