மலரும் மலர்களின் வாசமும் ஒரு மனிதனை அமைதியான மனநிலைக்கு கொண்டு செல்கிறது. அவ்வகையில் ஜவ்வாது அதையும் தாண்டி மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்க வல்லது என்றால் அது மிகையாகாது. நல்ல வாசம் உள்ள இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது.
நமது முன்னோர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என வாழ்ந்தனர். மருத்துவ குணங்கள் அடங்கிய இவ்வாசனை திரவிய பொருட்களை பயன்படுத்தினர். எனவேதான் நோய் நொடியில்லாமல் வாழ்க்கை நடத்தினர். உதாரணமாக குருமிளகு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புற்றுநோயை தடுக்கும். விஷத்தன்மையை முறிக்கவல்லது. ஏலக்காய் சிறுநீரகத்தில் கல் உண்டாவதை தடுக்கும், சிறந்த மனமுடையது, நுரையீரலுக்கு வலு சேர்த்து ஆஸ்துமா நோயை குணப்படுத்தும். கிராம்பு பல் வலிக்கு சிறந்த நிவாரணம் தரவல்லது. பட்டை இரத்த ஓட்டத்தை சீராக்கும், வயிற்றுப்போக்கு, இருமலுக்கு சிறந்த மருந்து. இப்படி ஒவ்வொரு வாசனை திரவிய பொருட்களுக்கும் ஒவ்வொரு மருத்துவ பயன்கள் உண்டு
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners