வர்ணாவின் மரணம்
முதல் கிளைக் கதை
ஓர் இரவு வேளையில் ஓர் இளம்பெண் காவல் நிலையத்தை அடைந்து தன் வீட்டின் பக்கத்தில் ஒரு வீட்டில் இளமாறன் என்னும் ஒருவன் வர்ணா என்ற பெண்ணொருத்தியை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறுகிறாள்.அந்தப் பெண்ணுடன் காவல்துறை அதிகாரிகள் அங்குச் சென்றுப் பார்க்கிறார்கள்.
பூட்டிய வீடுதான் கண்ணில் படுகிறது. பூட்டை உடைத்துக் கொண்டுப் போனால் யாரும் கண்ணில்பட மறுக்கிறார்கள். ஆனால் சுவர் எங்கும் ரத்தம் சிதறி கிடக்கிறது.
போலீஸ் விசாரணை ஆரம்பிக்க, அடுத்த நாள் காலைப் பொழுது அவர்களுக்கு ஒரு விபரீதத்துடன் ஆரம்பிக்கிறது.
அது என்ன? அதைச் செய்தது யார்?
அதைத் தொடர்ந்து பல கொலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடக்க, போலீஸ் மௌனம் காக்கிறது.
திக் திக் திவ்யா
இரண்டாம் கிளைக்கதை
இரு டிடெக்டிவ்கள் ஒரு பெண்ணின் புகாரின் பேரில் வர்ணா யார் என்பதை அறிந்து நடந்து முடிந்த கொலைகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. கேள்விகளோடு தேடி கொலைக்குற்றவாளியை அடையும் போது மிகுந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்கிறார்கள்.
படிக்க வெளிநாடு சென்ற திவ்யா, தன் எஸ்டேட்டில் நடக்கும் முறைகேடுகளை வேரோடு பிடிங்கி எரிய நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு தடையாய் நிற்கிறார் அவளின் தாய்மாமன். திவ்யா தன் களை எடுக்கும் பணியை தொடங்கிவிடுவாளோ என்ற அச்சத்தில் அவளைத் தீர்த்துக் கட்ட நினைக்கிறார் தன் சகாக்களுடன்.
அவள் வீட்டை அடையும்முன்னே அவளை கொல்லத் துடிக்கும் தாய்மாமனின் முயற்சி நடக்குமா? அல்லது திவ்யா தன் அறிவால் அவர்களை வெற்றி கொள்கிறாளா?