Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalRajeshkumar, a humble and modest writer, hails from the southern state of Tamilnadu, from a city called Coimbatore. A graduate in Botany and B.Ed, and a teacher by profession till 1975, the man started writing short stories during his pass time in his early ages. Toggling between work and personal life, he managed to continuously publish his works for the local magazines. Then, as his style and content embraced lakhs of readers, he was ruling the novel world by storm by writing nearly all the Weekly or Monthly magazines and dailies during the period 1969 to till now. Even after completing 50Read More...
Rajeshkumar, a humble and modest writer, hails from the southern state of Tamilnadu, from a city called Coimbatore. A graduate in Botany and B.Ed, and a teacher by profession till 1975, the man started writing short stories during his pass time in his early ages.
Toggling between work and personal life, he managed to continuously publish his works for the local magazines. Then, as his style and content embraced lakhs of readers, he was ruling the novel world by storm by writing nearly all the Weekly or Monthly magazines and dailies during the period 1969 to till now.
Even after completing 50 years of writing in tamil Literature, still he is writing in all leading offline and online magazines of present generation. He is the person who updates himself to present best to his readers.
Looking from behind the half tinted glasses, the man writes in simple and easy to comprehend language the stories running on science fiction and crime scenes.
From a person who has penned more than 1500 Novels, 2000 Short stories, 5 Movies and 250 Tele serials, one can never find explicit vulgarity in his works. He however stays away from the media, preferring to write what he feels, without much hesitation but with laser sharpness without wasting a single word.
He has written many articles on Science, answered more than 1000 science related questions of school students in educational magazine for 2 years titled SIR..! ORU SANTHEGAM. He has also written about Animal kingdom in a weekly magazine for 50 Weeks in the name of WOW… AINTHARIVU!!!
He has been fondly called by his readers as “The King of Crime Novels” despite he has touched almost all the genres and forms of the literature.
The Government of Tamilnadu conferred him with Kalaimamani award for his contribution towards Tamil Literature.
Read Less...Achievements
பஞ்சமாபாதகம்
இது இரண்டு கிளைக்கதை கொண்ட நாவல். ஒருபக்கம் மான்யா – இனியன், இரு பத்திரிக்கையாளர்கள் சிலை கடத்தல் பற்றிய கட்டுரைக்காக புவனேஷ்வர் நகருக்கு வருகிறார்கள
பஞ்சமாபாதகம்
இது இரண்டு கிளைக்கதை கொண்ட நாவல். ஒருபக்கம் மான்யா – இனியன், இரு பத்திரிக்கையாளர்கள் சிலை கடத்தல் பற்றிய கட்டுரைக்காக புவனேஷ்வர் நகருக்கு வருகிறார்கள்.அங்கு மான்யாவின் தோழி பல்லவி வீட்டில் தங்குகிறார்கள். அமைதியாக ஆரம்பிக்கும் இவர்களது வாழ்க்கையில் இதற்கு பிறகு நடப்பவை எல்லாம் விபரீதத்தின் வகையில் சேர்ந்தது.மறுபக்கம் ஒரு பெரியவர் தன்னிடம் இருக்கும் நிலத்தை விற்க ஓம்நமச்சிவாயம் என்னும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டிடம் வருகிறார். அந்த நிகழ்வுக்குபின் என்ன நடக்கப் போகிறது? புவனேஷ்வர் நகரில் நடக்கும் சிலைக் கடத்தல் சம்பவங்கள், அதனூடே இருக்கும் தந்திரம், சினம், ஆசை, பேராசை, அகங்காரம் மற்றும் ஆணவம். அடுத்து என்ன நடக்கும் என தெரியாத ஒரு பரபரப்பான கதைக் களம்.
அரேபிய ரோஜா
மஹிமா, தைரியமிக்க ஒரு அழகான இளம்பெண், ஒரு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் பணியாற்றுகிறாள். தன் குழுவுடன் சேர்ந்து மருத்துவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தொழில்நுட்பத்தை துபாயில் உள்ள அல்ஃஅரபத் என்னும் நிறுவனத்திற்காக கண்டுபிடிக்கிறாள். அப்போதிலிருந்து அவளுக்கு பிரச்சனைகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. முதலில் சாதாரணமாக வரும் மிரட்டல்கள் பின்பு அசாதாரணமாகின்றன. எதிரிகள் யார்.. எங்கு இருக்கிறார்கள் என்று ஒன்றும் புரியாத சூழ்நிலையில் பேராபத்து தனக்காக காத்திருக்கிறது என்று தெரிந்தும் துபாய் பயணம் மேற்கொள்கிறாள் மஹிமா. அவள் கால்கள் துபாய் தரையில் பட்டவுடன்தான் தெரிகிறது.. அவள் எத்தனை பெரிய விபரீதத்தில் சிக்கியிருக்கிறாள் என்று. இந்த அரேபிய ரோஜா மணக்குமா அல்லது மரணிக்குமா..?
தான் துப்பறியும் வழக்குகளில் தன் அறிவார்ந்த அணுகுமுறை மற்றும் நுண்ணறிவான விசாரணையால் எளிதாக குற்றவாளியை கண்டு பிடிக்கும் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி விவேக்குக்கும் அவனுடன
தான் துப்பறியும் வழக்குகளில் தன் அறிவார்ந்த அணுகுமுறை மற்றும் நுண்ணறிவான விசாரணையால் எளிதாக குற்றவாளியை கண்டு பிடிக்கும் க்ரைம் ப்ரான்ச் அதிகாரி விவேக்குக்கும் அவனுடன் பணிபுரியும் விஷ்ணுவுக்கும், மண்ணில் புதைக்கப்பட்ட தலை பற்றி செய்தி ஒரு புலனாய்வு பத்திரிக்கையாளர் மூலம் தெரிய வருகிறது. அது எங்கு புதைக்கப்பட்டது ? எதற்காக புதைக்கப்பட்டது ? என தெரியாமல் விசாரணையை துவங்கியவுடனே விவேக்குக்கு புரிகிறது, இந்த வழக்கு ஒரு பெரிய விபரீதத்தை நோக்கி பயணிக்கிறது என்று. ஃபாரன்சிக் தரும் ஆய்வு முடிவுகள், பதற வைக்கின்றன. இதற்கிடையே டாக்டர் ருத்ரபதி தன் உதவியாளர்கள் ஹரி மற்றும் சுபத்ராவுடன் சேர்ந்து நினைவிழந்த நிலையில் இருக்கும் பெண்ணை ஒரு புதுமையான சிகிச்சை கொண்டு குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த பெண்ணின் கணவன் அவளைத் தேடி வர, அது அனைவர்க்கும் பெரும் பிரச்சனையில் போய் முடிகிறது.
அது என்ன சிகிச்சை ? அந்த பெண் யார் ? அந்த பிரச்சனை என்ன?
விவேக், விஷ்ணு இருவரும் பயணிக்கும் பாதையில் ஏகப்பட்ட விடையில்லா வினாக்கள். மனித மூளை மரணத்திற்கு பிறகு என்னாகும்?
இறப்பில்லா வாழ்க்கை சாத்தியமா?
ஜாவார பழங்குடி மக்களின் எலும்புகள் தேடும் மருத்துவர்.. ஏதற்காக? மனித தலையில் என்ன இருந்தது?
பிராஸ்தட்டிக் விஷயங்களுக்கும் நைஜீரியாவுக்கும் என்ன தொடர்பு?,
ஒரு அரசியல்வாதியின் மர்ம மரணம்?
க்ளாஸ்டோரியம் பொட்டவீனம் என்றால் என்ன?
விடைகள் கிடைக்குமா ?
அந்த விடைகளில் குற்றவாளிகள் சிக்குவார்களா? இந்த மெகா கதை ஆழ்கடல் அமைதியும் ஒரு சூறாவளியின் பேரிரைச்சல் கொண்டது.
மும்பை பத்திரிக்கையொன்றில் ஜர்னலிஸ்ட்டாக பணியாற்றும் சில்பா, நெடுநாட்களுக்கு பிறகு சென்னையில் கணவன், குழந்தை என வசிக்கும் தோழி யாமினியைக் காண அவளுக்கே தெரியப்படுத்த
மும்பை பத்திரிக்கையொன்றில் ஜர்னலிஸ்ட்டாக பணியாற்றும் சில்பா, நெடுநாட்களுக்கு பிறகு சென்னையில் கணவன், குழந்தை என வசிக்கும் தோழி யாமினியைக் காண அவளுக்கே தெரியப்படுத்தாமல் அவள் வீட்டிற்கு வருகிறாள். அவளைப் பார்த்ததும் சில்பா அதிர்ச்சியடைந்து உறைந்துபோகிறாள்.அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்ன? கண்முன்னே சிதறி கிடக்கும் கேள்விகளுக்கு விடை தேடுகிறாள்? கிடைத்ததா? அதற்கு சில்பா என்ன செய்யப் போகிறாள்?
இது ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்ட திருமணம் ஆன ஆண் - பெண் உளவியல் சார்ந்த கதை.
மாதங்களில் அவள் மார்கழி !
வாணி, நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த ஒரு அழகான பெண் பாடகி. தருண் ஒரு பணக்கார தொழிலதிபரின் மகன். ஒரு மேடை கச்சேரியில் பாடும் வாணியைப் பார்த்தவுடன் ஒரு தலை காதல் கொள்கிறான் தருண். வாணியைத் திருமணம் செய்ய தருண் பல தடைகளை மீறி முயற்சிக்கிறான். அதே சமயம் வாணிக்கு திரைத்துறையில் பாடும் வாய்ப்பு வருகிறது.
இக்கட்டான சூழலில் வாணிக்கு எதிர்பாரா திரைத்துறை வாய்ப்பால் சொந்த வாழ்வில் சில பிரச்சனைகள் உருவாகின்றன. அதை சமாளிக்க சில யுக்திகளை கையாளுகிறாள்,ஒரு சிறு சாவி மூலம் பெருங்கதவை திறப்பது போல. அவை பலன் தந்ததா? தருண் தன் காதலை சொல்லும் முயற்சியில் வெற்றி பெற்றனா? வாணி தன் திரைத்துறையில் வந்த பிரச்சனையை எப்படி எதிர்க் கொள்கிறாள்?
இது ஒரு வெளிப்படையான, தெளிவான, தைரியமிக்க ஆனால் தன்னலமற்ற பெண்ணின் கதை.
இரண்டு கிளைகள் கொண்ட கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'.
முதல் கிளை
ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த வி
இரண்டு கிளைகள் கொண்ட கதைகளை எழுதுவதில் வித்தகரான எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் நாவல் 'நீல நிலா'.
முதல் கிளை
ஒரு தொழிலதிபருக்கு நேரும் பெரும் விபரீதம். அந்த விபரீதம் எதனால் புரியாமல் கலங்கி தவிக்கும் மருத்துவர்கள் ஒருபக்கம். இது தற்கொலை முயற்சியா அல்லது கொலைமுயற்சியா என துப்புதுலக்க அல்லல்படும் காவல்துறை அதிகாரிகள். அதை ஏற்படுத்திய எதிரி யார் என்பது மற்றொரு பக்கம்.
அவரின் பிள்ளைகளா, நண்பர்களா அல்லது தொழில் போட்டியா...?
கொலையாளி யார் என கண்டுபிடிப்பதில் வெற்றி கிட்டுமா?
இரண்டாவது கிளை
அடர்ந்த காணாதது கண்டான் காட்டில் ஒரு அதிசயத்தை கேள்விப்பட்டு அதன் உண்மைதன்மை அறிய தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு ஒன்று பயணிக்கிறது. அந்த குழு காட்டில் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இயற்கை என்ன என்று கேட்டு துவம்சம் செய்கிறது. அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையும் அந்த குழுவில் யாரேனும் ஒருவருக்காவது மரணபீதியை அளிக்கிறது. அஞ்சாமல் பயணிக்குமா அந்த குழு?
ஒரு கட்டத்தில் இரண்டு கிளைகளும் இணைகிறது....மர்மங்கள் அவிழ்கின்றன. புதிர்களுக்கான பதில்கள் புலப்படுகின்றன. யாரால்...எப்படி?
எல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது.அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்க
எல்லாம் ஒரு அரசியல்வாதியின் கொலையில் ஆரம்பிக்கிறது.அது காவல்துறைக்கு என்ன என்று புரிவதற்குள் , மேலும் அதே முறையில் பலர் கொலை செய்யப்படுகிறார்கள் பல துர்சம்பவங்கள் நடக்கின்றன.இவை ஆளும் அரசுக்கு பெருத்த நெருக்கடியாக மாறுகின்றது.பல கோணங்கள்.பல பார்வைகள்.விசாரணையின் ஒவ்வொரு அடியிலும் சறுக்குகிறது...காவல்துறை. ஆனாலும் ஒரு கட்டத்தில் குற்றவாளி யார் என யூகித்து நெருங்கும்போது.. பேரதிர்ச்சி அவர்கள் முன் உட்கார்ந்திருந்தது.
இது இருதுருவங்களுக்குமான போர்...இதில் ஜெயிக்கப் போவது யார் ?
அழகான விளம்பர உலகில் தடம் பதித்து தனக்கென பாதை அமைத்து..
புகழ்பெற நினைக்கிறாள், நேர்மையான, தைரியமிக்க இளம்பெண்ணான யமுனா.ஆனால், அவ்வளவு எளிதல்ல என அவளுக்கு அந்த உல
அழகான விளம்பர உலகில் தடம் பதித்து தனக்கென பாதை அமைத்து..
புகழ்பெற நினைக்கிறாள், நேர்மையான, தைரியமிக்க இளம்பெண்ணான யமுனா.ஆனால், அவ்வளவு எளிதல்ல என அவளுக்கு அந்த உலகில் ஒரு அடி வைத்ததுமே தெரிகிறது.சூழ்ச்சிகள்
துரோகங்கள்,பகைமை அனைத்தும் ஒருசேரத் துரத்துகின்றன.அவை அவளைத் தலைத்தெறிக்க ஓட வைக்கின்றன.ஆனால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு கட்டத்தில் அவற்றை எதிர்க்க துணிகிறாள்.
அவள் எடுக்கும் முடிவு சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் தருகிறது, ஏன்.. அவளுக்கும்தான்.
இனி...என்ன நடக்கும்... அனைவரின் மனதிலும் திக்...திக்...திக் !!!
Californian Girlfriend starts with the murder of an Indian Engineer in US. It gets intense when the investigation reveals that the Indian who was killed was a terrorist. The police department were perplexed when they unveil that they are looking for a serial killer, who specifically targets Indians.
Misty Moon belongs to a genre of Family thrillers. The story surrounds around Yamuna, who is a sobre house wife and also a daughter-in-law of a retired hi
Californian Girlfriend starts with the murder of an Indian Engineer in US. It gets intense when the investigation reveals that the Indian who was killed was a terrorist. The police department were perplexed when they unveil that they are looking for a serial killer, who specifically targets Indians.
Misty Moon belongs to a genre of Family thrillers. The story surrounds around Yamuna, who is a sobre house wife and also a daughter-in-law of a retired high court Judge. A police officer accuses her of intimidation to suicide of a young guy who was supposedly to be Yamuna's ex boyfriend. The situation gets intense when all the evidences turns against her and for many reasons she had to cover it up from her orthodox family for obvious reasons.
Good Morning United states starts with three different situations. A couple, who gets their US visa approved get ready to leave to US for their work. In another situation, a small group of terrorist plans to blast the flight that is carrying US Atomic Research Chief Mr. Rudolf. The Indian Intelligence Bureau(IB) was hinted about this threat and they are put on high alert.
Singapore Days is a romantic thriller that surrounds around a young lady Iniya. She is compelled to get married to someone against her interest as she was in a long relationship with her boyfriend Rohit, who lives in Singapore. Iniya travels to Singapore as the pressure rises from her Brother. Once Iniya lands in Singapore, Rohit starts to get threats from unknown sources for having Iniya. Soon, he meets with an accident and the cops begin their investigation. Did the cops were able to nab the real culprits behind the Rohit's attack
நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா.
இது நாவல் அல்ல......
ஒரு யுத்த களம்.
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நீளமான
யுத்தம்.
இந்த யுத்த களத்தில் போரிடுவத
நள்ளிரவு செய்திகள் வாசிப்பது துர்கா.
இது நாவல் அல்ல......
ஒரு யுத்த களம்.
நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நீளமான
யுத்தம்.
இந்த யுத்த களத்தில் போரிடுவது இரண்டு நாடுகள் அல்ல.....
இரண்டு உயிரினங்கள்.
ஒரு உயிரினம் ஆறறிவு படைத்த மனிதன்.
இன்னொரு உயிரினம் அரை உயிரியான அபாயகரமான வைரஸ்.
இந்த அரையுயிரி உயிர் வாழ வேண்டுமென்றால்
அதற்கு தேவைப்படும் உணவு மனிதனின் செல்கள்.
ஒட்டுமொத்த மருத்துவ விஞ்ஞானத்தையும் ஏமாற்றிவிட்டு
மனிதனின் உடம்பை தன்னுடைய உறைவிடமாகவும் உணவுக் கூடமாகவும் மாற்றிக்கொள்ள முயற்சி செய்யும் இந்த அபாயகரமான வைரஸ்களை ஒழித்துக்கட்டி வெற்றிபெற விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்.
ஆனால் வெற்றி பெறும் வேளையில் தோற்றுப் போய்விடுகிறார்கள்.
இதற்குக் காரணம் Bio war எனப்படும் இந்த உயிரியல் யுத்தத்திற்குப்
பின்னால் சில நாடுகள் அந்த அபாயகரமான வைரஸ்களோடு கூட்டணி வைத்துக் கொள்வது தான்.
அப்படி கூட்டணி வைத்துக் கொண்டதால்
ஏற்பட்ட விளைவுகளைத்தான்
நள்ளிரவு செய்தி துர்கா
இந்த நாவலின்
ஒவ்வொரு வரியிலும் நீங்கள் வியப்பில் உறைந்து போகும்படி கதை சொல்லப் போகிறாள்.
ஆனால்.......
இது கதையல்ல.....
எதிர்காலத்தில் நடக்கப் போகிற நிஜம்.
Tender Thorns :- Amudha, the elder daughter of a family, gets a job offer in a corporate company, only blackmailing one of the Senior Directors in the organization. The Senior Director, who was also linked to the drug mafia, retaliates back which gets Amudha into trouble. Tender Thorns is the translated version of the Tamil Novel, 'Adhu Idhu Edhu'.
The Last Commandment:- Jagan and his dad, who is a handicapped and retired Air Force officer, were c
Tender Thorns :- Amudha, the elder daughter of a family, gets a job offer in a corporate company, only blackmailing one of the Senior Directors in the organization. The Senior Director, who was also linked to the drug mafia, retaliates back which gets Amudha into trouble. Tender Thorns is the translated version of the Tamil Novel, 'Adhu Idhu Edhu'.
The Last Commandment:- Jagan and his dad, who is a handicapped and retired Air Force officer, were contacted by criminals to kill the Air Marshal in a felicitation ceremony. The situation unfolds when the police get a tip of the incident and begin the investigation. 'The Last Commandment' is the translated version of the Tamil Novel, 'Kadaisi Kattalai', which is built in the backdrop of the Indian Air Force.
1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்
1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்த புத்தகத்தை படித்தவர்கள், எதையும் கேள்வி கேட்டு கற்பதில் விற்பன்னர் ஆகி விடுவார்கள்.
இதோ அவரின் வார்த்தைகளில், இந்த புத்தகத்தைப் பற்றி...
அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...! உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ள "ஸார்..! ஒரு சந்தேகம்" வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும்,கேட்ட பல அரிய அறிவியல் கேள்விகளுக்கு அதற்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்களை சிறப்பாக கொடுக்க முடிந்ததில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன். இந்த அறிவியல் புத்தகம், தினமும் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்களின் அடிப்படை உண்மைகளை விளக்குகிறது.இறகு எடை காகிதத்தில் உருவான இந்த புத்தகம்..... கண்ணுக்கும் கைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம்.
ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டும் கற்கலாம்... மகிழ்ச்சியாகவும் கற்கலாம்... அது அமையும் ஆசானைப் பொறுத்தது. அறுதியிட்டு சொல்வேன்.. இந்த புத்தகம் பின்னே சொன்ன வகையைச் சார்ந்தது.
கற்றலின் தொடக்கப் புள்ளி.. இதோ உங்கள் கைகளில்!
என்றும் அன்புடன்
ராஜேஷ்குமார்
இரண்டு ட்ராக் கதை.
ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்?
இன்னொரு பக்கம்...
உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வர
இரண்டு ட்ராக் கதை.
ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்?
இன்னொரு பக்கம்...
உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வருகிறது.அவரைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக முனைகிறார்கள். அவர்களால் முடிந்ததா?
சில கோணங்களில் பார்க்கப்படும் உண்மைகள், பொய்யாகும். எப்படி?
உள்ளே...உங்களுக்காக
விறுவிறுவென பறக்கும் பக்கங்களுடன்
பொய்...
பொய்யைத் தவிர வேறோன்றுமில்லை!
..........................................
பணம், பதவி, அதிகாரம் உள்ள ஒருவனுக்கு கேட்டதெல்லாம் வசப்படுகிறது.
ஒரே ஒரு நாள்...ஒன்றை
கேட்கிறான்.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்க்கையை மட்டுமின்றி, மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றுகிறது.
அவன் கேட்டது என்ன...?
யாருடைய வாழ்க்கைகள் எல்லாம் மாறின..?
உள்ளே காத்திருக்கின்றன பரப்பரப்பான அத்தியாயங்கள்.
விலைக்கு ஒரு வானவில்
மிதிலா, டிவி சேனல் ஒன்றில் பணியாற்றும் ஒரு மிக துணிச்சலான மற்றும் நேர்மையான பெண்.
அவள் ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்காக தன் குழுவினருடன் பெங்க
விலைக்கு ஒரு வானவில்
மிதிலா, டிவி சேனல் ஒன்றில் பணியாற்றும் ஒரு மிக துணிச்சலான மற்றும் நேர்மையான பெண்.
அவள் ஒரு நிகழ்ச்சி தயாரிப்புக்காக தன் குழுவினருடன் பெங்களூருக்கு செல்கிறாள்.
அந்த பயணமும் அந்த நிகழ்ச்சிக்கான கருப்பொருளும் மிதிலாவின் வாழ்க்கையின் போக்கையே மாற்றும் என கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.
போகும் இடத்தில் எதிர்பாராத நட்பு.அதனால், வரும் அடுக்கடுக்கான அதிர்ச்சிகரமான நிகழ்வுகள், சூழ்ச்சிகள் அவளை நிலைகுலைய வைக்கின்றன. இருந்தாலும்... தைரியமாக எதிர்த்து நிற்கிறாள்... போராடுகிறாள். ஆனால்,வெற்றி பெறுகிறாளா?
இந்த கதை படிக்கும் உங்களுக்கு மிதிலா கதாபாத்திரத்தின் எதையும் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொஞ்சமாவது ஒட்டிக்கொள்வது நிச்சயம்.
கங்கை இங்கே திரும்புகிறது
ஒரு ரயில் பயணத்தில் நிவேதனும் ஹமீதும் பரிச்சயம் ஆகிறார்கள். அதே வேகத்தில் ஒரு அற்ப விஷயத்தில் எதிரும் புதிருமாக மாறுகிறார்கள்.
பயணம் நீளும் போது,ஒரு எதிர்பாராத சம்பவம்...
பயணிப்பவர்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கிறது. கண்டிப்பாக உங்களையும் உலுக்கி எடுக்கும்.
அங்கிருந்து கதை வேறு திசையில் பயணிக்கிறது.
அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இளகிய இதயமுள்ளவர்களின்
மனதை நெகிழவும் வைக்கும், கண்ணீர் கசியவும் வைக்கும்.
வாழ்க்கையில்,
சில கேள்விகளுக்கு பதில் என்றுமே கிடைக்காது.
அதுபோன்ற கேள்விகளை இந்த கதையில் எதிர்ப்பார்க்கலாம். விடை கிடைக்குமா...என்றால் வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லலாம்.
ஒன்றுமட்டும் நிச்சயம் இதில் வரும் நிவேதனையும் ஹமீதையும்
நீங்கள்
மறக்க வெகுநாளாகும்.
கலிபோர்னியா காதலி -
கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோவில் ஜாகீரும் செங்குட்டவனும் ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அதுவும்தவிர அந்த நகரத்திலேய
கலிபோர்னியா காதலி -
கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோவில் ஜாகீரும் செங்குட்டவனும் ஒரே சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். அதுவும்தவிர அந்த நகரத்திலேயே இருவரும் ஒரே அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள்.ஒருநாள் காதலர் தினத்தன்று தன் காதலி லூசியைக் காணச் செல்கிறான்,ஜாகீர். அப்போது அவனது அலைபேசி ஒலிக்கிறது.மறுமுனையில் காதலியின் குரல். அந்த அழைப்பிற்குபின் நடப்பவை எல்லாம் அவன் கை மீறி போகிறது. வீபரீதம் ஒன்றில் சிக்குகிறான்.இதுகுறித்து போலீஸ் தன் விசாரணையை ஆரம்பிக்கிறது. அவனுடன் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருமே பிரச்சனைகளில் சிக்குகிறார்கள். அதனூடே, அந்த நகரத்தில் தொடர் கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. பிரச்சனையின் மையம் அறியாது திகைக்கின்றனர் சான் பிரான்ஸிஸ்கோ போலீஸ் அதிகாரிகள்.
மறு பக்கம், சான் பிரான்ஸிஸ்கோ நகரை சேர்ந்த மார்ட்டின் சாம்ஸ் குடிபோதையில் கார் ஓட்டியதற்காக போலீஸ் அதிகாரி பால் ஹாரிஸிடம் பிடிபடுகிறான்.அவர்,அவனிடம் விசாரிக்க ஆரம்பித்தவுடன், முன்னுக்குபின் முரணாக பதில் அளிக்கிறான் மார்ட்டின் சாம்ஸ்.அதனால் சந்தேகத்தின்பேரில் அவன் காரை சோதனையிடுகிறார். அவருக்கு அதில் ஒரு விபரீதம் காத்திருப்பதை அறியாமல். பின்னர் நடக்கும் விஷயங்கள் எல்லாம் திகிலைக் கூட்டுகிறன.
இந்த இரண்டு கிளைக் கதைகளும் ஒன்றிணைந்து சான் பிரான்ஸிஸ்கோவில் நடக்கும் குற்ற பின்னணிகளை அதிர்வுடன் விவரிக்கிறது.
ஹாங்காங் விழிகள்
இரண்டு கிளை கதை.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் வைதேகி. தன் கல்யாணச் செலவுகளுக்காக வீட்டை அடமானம் வைத்து வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால் வீடு பறி போகும் அபாயம்… அந்த கஷ்டத்தில் மீள்வதற்கு ஒரு வாய்ப்பு அவளைத் தேடி வருகிறது! ஹாங்காங் சென்று அங்கு ஒருவரிடமிருந்து ஹாங்காங் விழிகளை பெற்று வர விமானத்தில் பறக்கிறாள். ஆபத்தில்லா பயணம் என நினைத்து பயணக்கிறாள் வைதேகி ஆனால் அழகான ஹாங்காங்கில் திடுக்கிடும் ஆபத்துக்களை அவள் சந்திக்க நேரிடுகிறது...! ஹாங்காங் விழிகள் என்றால் என்ன? சொன்னபடி அவற்றுடன் சென்னை வந்தாளா வைதேகி…?
50கேஜி தாஜ்மகால்
புகழின் உச்சியில் இருக்கும் இளம் பரதநாட்டிய தாரகை ஜோதிகாவுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு ,அமையப் போகும் அவளின் திருமண வாழ்க்கைக்கு ஒரு பூதாகரமான ப
50கேஜி தாஜ்மகால்
புகழின் உச்சியில் இருக்கும் இளம் பரதநாட்டிய தாரகை ஜோதிகாவுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு ,அமையப் போகும் அவளின் திருமண வாழ்க்கைக்கு ஒரு பூதாகரமான பிரச்சனையை அழைத்துக்கொண்டு வருகிறது. இதனால் அவள் நிம்மதி இழக்கிறாள்.இந்நிலையில் காத்திருக்கும் விபரீதம் அறியாமல் ஜோதிகா ஒரு கலாச்சார நிகழ்விற்காக கலைத்துறை அமைச்சரை காண ஆக்ரா செல்கிறாள்.அங்கு முன்பிருந்த பிரச்சனையுடன் இன்னொரு விபரீதமும் சேர்கிறது. இதனிடையே ஜோதிகாவைத் தேடி அவளைத் திருமணம் செய்யப் போகும் ராகவ்வும் ஆக்ரா வருகிறான். அங்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகள் ஜோதிகாவையும் ராகவ்வையும் அதிர வைக்கின்றன.
அபாய நோயாளி
இரண்டு கிளை கொண்ட கதை
முதல் கதை
ஷ்ரேயாவை மணம்முடிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் பரணியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறது அவன் குடும்பமும் ஷ்ரேயா குடும்பமும். ஆனால், விமானம் தரை இறங்கும் முன்னேமே பரணிப் பற்றிய ஒரு அதிர்ச்சி செய்தியால் நிலைகுலைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பது புரியாமல் தவிக்கிறார்கள்.தீர்வுக்காக மருத்துவர்களும், காவல் துறை அதிகாரிகளும் களம் இறங்குகிறார்கள். ஆனால், நேரம் செல்ல செல்ல பிரச்சனைகள் மேலும் கிளைவிட சூழல் இன்னுமும் குழப்பமாக மாறுகிறது.
இரண்டாவது கதை
உடல்நிலை குன்றிய மனைவி மனோரஞ்சிதத்திற்கு கணவன் சுபாஷ் உறுதுணையாக இருக்கிறான். சுபாஷ் வெளியூர் செல்கையில் தன்னை கவனித்துக் கொள்வதற்காக திலகா என்ற பெண்ணை வேலைக்கு எடுக்கிறாள் மனோரஞ்சிதம். அங்கிருந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.ஏன்.. எப்படி என தெரிவதற்குள் ஒரு பெரும் விபரீதம் நடக்கிறது. காவல்துறை விசாரணையை முடுக்குகிறது.யார் குற்றவாளி என அனைத்து திசைகளிலும் சாட்டையைச் சொடுக்குகிறது.
ஐந்தாம் பிறை
பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதை
ஐந்தாம் பிறை
பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதைப் பார்ப்பதையே அதிர்ஷ்ட நாளாய்க் கருதுகிறோம் . இந்து மதம் மட்டுமல்ல , மற்ற மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன . ஆனால் இந்த நாவலில் நிலவின் ஐந்தாம் பிறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , விபரீதமான நிகழ்வுகள் நடக்கின்றன . கதையில் எத்தனையோ கதாபாத் திரங்கள் உலா வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் இந்த ஐந்தாம் பிறைதான் . எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா .. ? நாவலைப் படியுங்கள் ! ஆச்சர்யப்படுங்கள் !!
அடுத்த இலக்கு
இந்த உலகில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அது எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி ... பணம் , பெண் , பகை - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும் . ஆனால் இந்த ‘ அடுத்த இலக்கு ’ நாவலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மேற்சொன்ன மூன்றும் அல்லாமல் வேறு ஒரு காரணம் . அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருப்பதுதான் வியப்பான ஒரு விஷயம் . கதையின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி யைக் கொடுத்தாலும் , அது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
வெற்றிகரமாக க்ரைம் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இளம் திரைப்பட இயக்குநர் பிரசன்னாவும் இளம் தொழில் அதிபர் கிருஷ்ணசந்தருக்கும் ஒரு விபரீதமான சவாலில் இறங்குகிறார்கள்.
வெற்றிகரமாக க்ரைம் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இளம் திரைப்பட இயக்குநர் பிரசன்னாவும் இளம் தொழில் அதிபர் கிருஷ்ணசந்தருக்கும் ஒரு விபரீதமான சவாலில் இறங்குகிறார்கள்.
கொலை செய்பவர்கள் எப்படியும் சிறு தவறாவது செய்து போலீசில் சிக்கிக் கொள்வார்கள்..என்பது பிரசன்னாவின் வாதம்
போலீசில் மாட்டிக்கொள்பவர்கள் தவறை தவறாக செய்பவர்கள். அதனால், நான் ஒரு கொலை செய்கிறேன். அதிலில் இருந்து எப்படி தப்பிக்கிறேன் என்பதை பார் - இது கிருஷ்ணசந்தரின் எதிர்வாதம்.
இதைக் கேட்டதும் அதிர்கிறான் பிரசன்னா. முதலில் தயங்குபவன் பிறகு கிருஷ்ணசந்தர் தோற்றால் அவன் சொத்தை தருவதாக சொன்னதும் ஒப்புக்கொள்கிறான்.
இதற்குபின் , கிருஷ்ணசந்தர் இந்த பந்தயத்தை வெல்ல திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டம் என்ன ? யாரை கொலை சய்ய முடிவெடுக்கிறான்? பரபரவென நகரும் கதைக்களம் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும்.
சிறப்பு செய்தி - விவேக்கும் ரூபலாவும் துப்பறியும் அதிரடி கதை இது.
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்ப
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்படும் ஸ்பெஷல் க்ரைம் டிவிஷன் ஆஃபீஸர். SCD என்பதின் விரிவாக்கம் Special Crime Division என்பதாகும். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சீரியஸ் க்ரைம்ஸ் Serious Crimes எதுவாக இருந்தாலும் சரி, அதை இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் ஒரு எஸ்.சி.டி ஆஃபிஸரின் பணி.அதைத்தான் விவேக் இப்போது செய்து கொண்டிருக்கிறார். என்றுமே இளமையாய் இருப்பதால் விவேக்கின் பிறந்த தேதி, வருடம் பற்றி நீங்கள் யாரும் கேட்க அனுமதியில்லை.
ரூபலா:
ஹோம் சயின்ஸ் படித்த அதி அழகான ரூபலாவிற்கு காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை.ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், அந்த ஆசை நிராசையாகிவிட விவேக்கின் திறமையை காதலித்து மிஸஸ் விவேக்காக மாறியவள்.விவேக் துப்பறியும் மிகவும் சிக்கலான வழக்குகளை தானும் உள்வாங்கிக் கொண்டு அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து அணில் போல் உதவிக்கொண்டு இருப்பவள்.
விஷ்ணு :
விவேக்கிடம் பணிபுரியும் ஓர் உதவிஅதிகாரி. கிட்டத்தட்ட விவேக்கின் நிழல்.பேசும் பேச்சில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் விஷயம் இருக்கும். மூச்சுத் திணற வைக்கும் சிக்கலான நேரங்களில் ஆக்ஸிஜனாய் இருப்பவன்.
இரண்டு நாவல்களும் எதார்த்த நடையில் எழுதபட்ட குடும்ப த்ரில்லர்கள்.
19 வயது சொர்க்கம் -
தன் காதலில் ஏற்பட்ட ஒரு பெரும் பிரச்சனைக்காக, துபாயில் இருந்து திரும்பும
இரண்டு நாவல்களும் எதார்த்த நடையில் எழுதபட்ட குடும்ப த்ரில்லர்கள்.
19 வயது சொர்க்கம் -
தன் காதலில் ஏற்பட்ட ஒரு பெரும் பிரச்சனைக்காக, துபாயில் இருந்து திரும்பும் ராஜகணேஷ்,நண்பன் ஜெயந்த்தின் உதவியை நாடுகிறான். ஜெயந்த்தும் அவன் மனைவி சூர்யநிலாவும் இருவரையும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அதனால், இளம் தம்பதிக்கு அடுக்கடுக்கான பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.அவற்றை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவர்களால் அதிலிருந்து வெளி வர முடிந்ததா ? காட்சிகள் பதைபதைப்பையும், வசனங்கள் நெஞ்சையும் நெகிழ வைக்கும். முதலில் காதல் கதையாக ஆரம்பித்து பின்பு குடும்ப கதையாக மாறி, பின்பு க்ரைம் திரில்லராக உருவெடுக்கிறது இந்த கதை. முடிவு, இளகிய மனதுடையோர் கண்களில் கண்ணீர் கசியவிடும் என்பதில் சந்தேகமில்லை.
யமுனாவின் 48 மணிநேரம்
அழகான இளம்பெண் யமுனா, தன் தோழி சுவர்ணாவுடன் இரவு காட்சி படம் ஒன்றைப் பார்த்துவிட்டு திரையரங்கிலிருந்து வெளியே வருகிறாள்.அந்த பேய் மழை பொழியும் இரவில் தன் தோழியோடு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு போக, ஆட்டோ ஒன்றில் பயணிக்க முடிவெடுக்கிறாள்.அந்த நேரத்தில் சுவர்ணா எடுக்கும் ஒரு சிறிய ஆனால் தவறான முடிவால், ஒரு பெரும் இழப்பு காத்துக் கொண்டிருந்ததை இருவரும் அiறிய வாய்ப்பில்லை. யமுனா,அடுத்த 48 மணி நேரம் தன் வாழ்க்கையையே புரட்டி போடும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டாள். எதிர்பாராத மனித ஓநாய்கள், ஆபத்தில் உதவும் மனிதர்கள்,சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்த உலகத்தை முதன் முதலாக சந்திக்கிறாள். திகில் மற்றும் திடுக்கிடும் பரபரப்பான சம்பவங்கள் நிறைந்த கதை.
க்ரைம் கதை மன்னர் என்று நான்கு தலைமுறை வாசகர்களால் அழைக்கப்பட்டவர் அன்புக்குரிய எழுத்தாளர் ராஜேஷ்குமார், இப்பொழுது ஐந்தாவது தலைமுறை வாசகர்களையும் தன்னுடைய எழுத்துக்கள
க்ரைம் கதை மன்னர் என்று நான்கு தலைமுறை வாசகர்களால் அழைக்கப்பட்டவர் அன்புக்குரிய எழுத்தாளர் ராஜேஷ்குமார், இப்பொழுது ஐந்தாவது தலைமுறை வாசகர்களையும் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் ஈர்த்து, அவர்களையும் வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்.
அச்சிதழ்கள் வாயிலாக இவருடைய படைப்புகள் வெளியாகி உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் விரும்பிப் படிக்க காரணம் இவருடைய நாவல்களில் அறிவியலும், குற்றவியலும் ஒன்றாக சங்கமித்து சம்பவங்கள் மின்னல் வேகத்தில் நகர்வதுதான். இப்போதும் இவரது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று மின்புத்தகங்களாகவும்,ஒலிப்புத்தகங்களாகவும்,திரைப்படங்களாகவும் வாசகர்களுக்கு விருந்து படைத்து கொண்டிருக்கின்றன.
கடந்த 50 ஆண்டுகளாக இவர் 1500 மேற்பட்ட நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது அதுதவிர, அறிவியல் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், சமூக மற்றும் ஆன்மிக புதினங்களையும் எழுதியுள்ளார்.
மிக முக்கியமாக 'என்னை நான் சந்தித்தேன்' என்கிற பெயரில் தன் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை சுயசரிதமாகவும் படைத்துள்ளார். இது ஒரு மிகச்சிறந்த சுயமுன்னேற்ற நூலாக இன்றைய இளைஞர்களுக்கு விளங்குகிறது.
இவருக்கு தமிழ்நாட்டின் கலைக்கான உயரிய விருதான கலைமாமணி விருது 2010ம் ஆண்டு வழங்கப்பட்டிருக்கிறது. நேற்றல்ல, இன்றல்ல... என்றுமே தமிழ் குற்றப் புதினங்களின் மன்னர் இவர்தான் என்றால் அது மிகையல்ல.
சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்
சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்கு அப்பாவிடம் பயம் கலந்த மரியாதை.
ஒரு சமயத்தில் தன் உயிரை காப்பற்றியதால் சுபமதி ,புவனேந்திரன் எனும் இளைஞனிடம் மனதை பறிக் கொடுக்கிறாள். இதற்கிடையில் அவளின் அப்பா தன்னுடனே இருக்கும் அக்கா பையன் சுந்தரத்தை சுபமதிக்கு திருமணம் செய்ய ஆயுத்தம் செய்கிறார்.
காதலன் வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான்.அவ்வளவு இலகுவாக அப்பாவிற்கும் சுந்தரத்துக்கும் துரோகம்செய்ய அவளுக்கு மனம் வரவில்லை.
குழப்பத்தில் ஆழ்கிறாள் சுபமதி.ஆனால் அவள் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையை மட்டுமல்ல அவள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது.
கதையில் வரும் வசனங்களும் நிகழ்வுகளும் உங்கள் மனதை வருடவும் செய்யும், நெகிழவும் செய்யும்.
பிறகு, கதைக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அறிய படியுங்கள்,ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் இரண்டாவது தாலி.
வெல்வெட் குற்றங்கள்...
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனதன் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு க்ரைம் நாவல்.
காணாமல் போன விமானம் பற்றிய முக்கிய தகவல்களை இந்தியத் தூதரக
வெல்வெட் குற்றங்கள்...
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனதன் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு க்ரைம் நாவல்.
காணாமல் போன விமானம் பற்றிய முக்கிய தகவல்களை இந்தியத் தூதரகத்தின் தனி நபர் ஒருவர் பெறும்போது சங்கிலித் தொடராக குற்றங்கள் நடக்கின்றன.
உலகெங்கும் உள்ள வெவ்வேறு குழுக்கள் ,அதிகாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில், அந்த நிகழ்வு தொடர்பான வகைப்படுத்தப்பட்ட இரகசிய சங்கேத வார்தைகளை மற்றும் குறியீடுகளை அபகரிக்க முயற்சிக்கின்றன. ஏன்...?
அந்த விமானத்திற்கு என்னதான் நேர்ந்திருக்கும்...அதன் கதி என்ன?
இதுவரைக்கும்
உறுதியான இறுதியான ஆதாரங்கள் எதுவும் மக்கள் பார்வைக்கு கிடைக்கவில்லை.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது கடலில் மூழ்கியதா அல்லது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதா அல்லது ஒரு திணிககப்பட்ட தற்கொலை முயற்சியா?
என்ன நடந்திருக்கலாம்...?
எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கற்பனையில் இருந்து உருவான ஒரு தலைசிறந்த க்ரைம் த்ரில்லர் நாவல்.
இளம் வருமானவரி அதிகாரிகளான சாதுர்யாவும் நித்திலனும் "ஆப்ரேஷன் ஆக்ட்டோபஸ்" என்ற சங்கேத பெயரில் ஒரு முன்னாள் முதலமைச்சரின் 500 கோடி ரூபாய் கருப்பு பணத்திற்கான ஆதாரத்தையும
இளம் வருமானவரி அதிகாரிகளான சாதுர்யாவும் நித்திலனும் "ஆப்ரேஷன் ஆக்ட்டோபஸ்" என்ற சங்கேத பெயரில் ஒரு முன்னாள் முதலமைச்சரின் 500 கோடி ரூபாய் கருப்பு பணத்திற்கான ஆதாரத்தையும் அதன் இருப்பிடத்தையும் தேடி அவரின் பண்ணை வீட்டுக்கு அவருக்கு தெரியாமலேயே செல்கின்றனர். அவர் ரௌடியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்து ஒரு மோசமான அரசியல்வாதி மாறியவர் மற்றும் எதிரிகளை கொலை செய்ய சற்றும் தயங்காதவர் என்றும் அறிந்தும் இருவரும் தங்கள் உயிரை பணயம் வைக்கின்றனர்.
அங்கு ஆரம்பிக்கும் கதை, எதிர்பார்க்காத ஒரு கொலை நடப்பதில் இருந்து சூடு பிடிக்கிறது. அதன்பின நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் திடுக்கிடும் திருப்பங்களுடன் பயணிக்கிறது. அதே பணத்தை தேடி சில சதிகார கும்பல்களும் அரசாங்கத்தை சார்ந்த சில துறைகளும் களம் இறங்குகின்றன.
ஒரு கட்டத்தில் தொடர் மரணங்கள், கொலைகள் காரணமாக
போலீஸ் துறையும் தன் பங்குக்கு விசாரணையை துவக்குகிறது.
இந்த ஆட்டத்தில் நண்பர்கள் எதிரியாக மாறுகிறார்கள். எதிரிகள் நண்பர்களாக மாறுகிறார்கள்.
முடிவில் என்ன நடக்கிறது?
பரபரவென நாலா திசைகளிலும் பறக்கிறது அதிரடி அரசியல் கதை.
க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம்.
க்ரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும்
க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம்.
க்ரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் ராஜேஷ்குமார், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது வாசகர் கேட்ட கேள்விக்கு சுவைபட பதில்களை அளித்துள்ளார்.
ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்களுடைய உதடுகளில் புன்னகை ஒன்று உதிப்பது உறுதி. பெரும்பாலான கேள்வி பதில்கள்,நம்முடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை என்பதால் அவை பயனுள்ளதாக இருப்பது இந்தப் புத்தகத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.
காணாமல் போன ஆகாயம்
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந
காணாமல் போன ஆகாயம்
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்...திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரைம் த்ரில்லர்...மெய்சிலிர்க்க வைக்கும்.
இரவு நேர சூர்யகாந்தி
ஒரு இளம் பெண்ணின் குற்றச்சாட்டில் கதிகலங்கி நிற்கிறது ஒரு காந்தியவாதியின் குடும்பம். அது உண்மையா என அந்த குடும்ப உறுப்பினர்களே தங்களால் ஆன விசாரணை முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். விறுவிறுவென நகரும் கதையில் திருப்பங்கள் உங்களை திக்குமுக்காட செய்யும்.
நெடுஞ்சாலையில் ஒரு பிரேக் பிடிக்காத காரில் நீங்கள் அமர்ந்திருந்து,அந்த கார் வேகமாக பயணித்தால் எப்படி இருக்கும்...? அந்த அனுபவத்தை இந்த இரு கதைகள் தரும். இரண்டிலுமே க்ரைம் இ
நெடுஞ்சாலையில் ஒரு பிரேக் பிடிக்காத காரில் நீங்கள் அமர்ந்திருந்து,அந்த கார் வேகமாக பயணித்தால் எப்படி இருக்கும்...? அந்த அனுபவத்தை இந்த இரு கதைகள் தரும். இரண்டிலுமே க்ரைம் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு வகை.
1.வெள்ளை நிறத்தில் ஒரு வானவில் - ஒரு திறமையான இளம் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தன் மனைவி லதிகாவுடன் சென்னையில் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்போது நண்பனின் குடும்ப பிரச்சினை உருவில் ஒரு சிக்கல் வருகிறது. அதற்கு தீர்வை கண்டறிய பெங்களூர்க்கு தனியாக செல்கிறான்.அங்கே பலவித ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவற்றை எப்படி எதிர்க்கொண்டான்... எப்படி சமாளித்து மீண்டான்? நண்பனின் பிரச்சினை தீர்ந்ததா? கேள்விகளுக்கு விடைகள் தெரிந்துகொள்ள பக்கங்களை புரட்டுங்கள்...பரபரப்பான ஆனால் நெகிழ வைக்கும் குடும்பக் கதை... காத்திருக்கிறது.
2.தவறுக்கும் தவறான தவறு - இந்த கதை...இரண்டு பாதைகளில் பயணித்து ஒன்றாக இணையும். ஒன்று... அமெரிக்காவிற்கு சென்று எய்ட்ஸ் நோய் பற்றியும் அதை எதிர்க்கும் மருந்தின் தொழில்நுட்பங்களைப் பற்றியும் அறிந்து கொண்டு வருகிறார், டாக்டர் சற்குணம். அவர் இந்திய மண்ணில் கால் பதிக்கும் விநாடியிலிருந்து அவர்க்கு நேரும் விபரீதங்கள் அவர் கனவிலும் நினைக்காதவை. அவற்றிலிருந்து வெளியறே அவருக்கு வெளிச்சகீற்று கிடைத்ததா? இரண்டு...கொடூரமாக நடக்கும் தொடர் கொலைகளின் காரணத்தை அறியவும் குற்றவாளிகளை பிடிக்கவும் போலீஸ் அதிகாரிகள் புலனாய்வு செய்கிறார்கள். தலையும் புரியாமல் வாலும் புரியாமல் இருக்கும் வழக்கை கிடைக்கும் துப்புகளைக் கொண்டு சமயோசிதமாக நகர்த்துகிறார்கள். க்ரைம் த்ரில்லர்களில்.... இது ஒரு சரிக்கும் சரியான சரி!
க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான, பரபரப்பான இரு நாவல்கள்.
1.பதினோரவது அவதாரம்.
எப்போதும்...தீயவற்றை அழிக்க கடவுள்தான் அவதாரம் எடுத்து வரவேண்டும் எ
க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான, பரபரப்பான இரு நாவல்கள்.
1.பதினோரவது அவதாரம்.
எப்போதும்...தீயவற்றை அழிக்க கடவுள்தான் அவதாரம் எடுத்து வரவேண்டும் என்பதில்லை.சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில மனிதர்களும் அவதாரம் எடுப்பார்கள். அவர்களின் அந்த அவதாரம் எப்போது தோன்றும்...மறையும் என யாருக்கும் தெரியாது. ஆனால் அச்சமயம் கொடுஞ்செயல்கள் தன் அளவில் சிறுத்திருக்கும். ஆனால் முற்றிலும் அவற்றை அழிக்கமுடியுமா?
அப்படி அழிக்க வந்த இந்த பதினோரொவது அவதாரம் எப்போதும் நம்மை காக்குமா..இல்லை தன் வேலை முடிந்தவுடன் அழிந்துவிடுமா? தொடர் கொலைகள்...சவால் விடும் கொலையாளி...திறமையான புலனாய்வு... இரண்டு ட்ராக்குகள் கொண்ட பரபரப்பான ஒரு க்ரைம் த்ரில்லர்.
2. பனி நிலவு
லேகா, ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். தன் அம்மா செண்பகவல்லி, அப்பா ராமமூர்த்தியுடன் வசிக்கிறாள். திடீரென்று சுற்றியுள்ளவர்கள் அனைவரும் ஆச்சரியம்படும்படியாக லேகாவிற்கு பணக்கார இடத்தில் திருமணம் சம்பந்தம் அமைகிறது.அதுவும் மும்பையிலிருந்து. இந்த மகிழ்ச்சியான தருணத்துடன் கூடவே ஒரு புயல் போல சிக்கல் ஊர்மிளா என்ற பெண் உருவில் வருகிறது. அந்த சிக்கலைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் லேகாவிற்கு. மும்பைக்கு புறப்பட்டு செல்கிறாள்...தன் வருங்கால கணவன் சுந்தருடன் சென்ற இடத்தில் அலைக்கழிக்கப் படுகிறாள். உண்மையைக் கண்டுபிடிக்க அவள் படும்பாடு...நம்மை பதைபதைக்க செய்யும். ஆனால்நிறைய இடங்களில் நெகிழவும் செய்யும்... இந்த பனிநிலவு.
1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்
1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்த புத்தகத்தை படித்தவர்கள், எதையும் கேள்வி கேட்டு கற்பதில் விற்பன்னர் ஆகி விடுவார்கள்.
இதோ அவரின் வார்த்தைகளில், இந்த புத்தகத்தைப் பற்றி...
அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...! உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ள "ஸார்..! ஒரு சந்தேகம்" வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும்,கேட்ட பல அரிய அறிவியல் கேள்விகளுக்கு அதற்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்களை சிறப்பாக கொடுக்க முடிந்ததில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன். இந்த அறிவியல் புத்தகம், தினமும் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்களின் அடிப்படை உண்மைகளை விளக்குகிறது.இறகு எடை காகிதத்தில் உருவான இந்த புத்தகம்..... கண்ணுக்கும் கைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம்.
ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டும் கற்கலாம்... மகிழ்ச்சியாகவும் கற்கலாம்... அது அமையும் ஆசானைப் பொறுத்தது. அறுதியிட்டு சொல்வேன்.. இந்த புத்தகம் பின்னே சொன்ன வகையைச் சார்ந்தது.
கற்றலின் தொடக்கப் புள்ளி.. இதோ உங்கள் கைகளில்!
என்றும் அன்புடன்
ராஜேஷ்குமார்
பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட வ
பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள்.
அந்த கிராமத்தின் பெயர் நற்கோள்புரம்.
பறக்கும் கற்கள்,ஊரையே ஆட்டி படைக்கும் பஞ்ச வர்ண ஸ்வாமிகள், எப்போதுமே ஆயிரத்தை தாண்டாத மக்கள் தொகை,மூன்று நாட்களுக்கு மேல் தங்கிய விருந்தினர்கள் உயிர் இழப்பார்கள் என பயமுறுத்தும் கிராமம், அந்த கிராமம்.
பரபரப்பான நிகழ்வுகள் திடுக்கிடும் சம்பவங்கள் என உங்களை அதிர்ச்சியில் கட்டிப் போடுவாள், இந்த தேவதை.
ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி
ஒரு நள்ளிரவு நேரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் நடக்கும் சட்ட விரோதமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான ஒரு த்ரில்லர்.
மழை பெய்கிற ஒரு நள்ளிரவில் இளம்பெண் ஒருத்தி நெஞ்சுவலியால் அவதிப்படும் தன்னுடைய அப்பாவைக் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டு அந்த மருத்துவமனைக்கு வருகிறாள்.
இரண்டு ட்யூட்டி டாக்டர்களின் காமப்பார்வை அவள் மேல் விழுகிறது. அந்தப் பெண் அவர்களிடம் இருந்து தப்பித்தாளா இல்லையா என்பதும், அதற்குப் பிறகு நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் சம்பவங்கள் நிறைந்தது, இந்த இரவல் சொர்க்கம். இந்த கதையில், உங்கள் அபிமான விவேக்கும் ரூபலாவும் இருக்கிறார்கள்.
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்ப
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்படும் ஸ்பெஷல் க்ரைம் டிவிஷன் ஆஃபீஸர். SCD என்பதின் விரிவாக்கம் Special Crime Division என்பதாகும். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சீரியஸ் க்ரைம்ஸ் Serious Crimes எதுவாக இருந்தாலும் சரி, அதை இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் ஒரு எஸ்.சி.டி ஆஃபிஸரின் பணி.அதைத்தான் விவேக் இப்போது செய்து கொண்டிருக்கிறார். என்றுமே இளமையாய் இருப்பதால் விவேக்கின் பிறந்த தேதி, வருடம் பற்றி நீங்கள் யாரும் கேட்க அனுமதியில்லை.
ரூபலா:
ஹோம் சயின்ஸ் படித்த அதி அழகான ரூபலாவிற்கு காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை.ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், அந்த ஆசை நிராசையாகிவிட விவேக்கின் திறமையை காதலித்து மிஸஸ் விவேக்காக மாறியவள்.விவேக் துப்பறியும் மிகவும் சிக்கலான வழக்குகளை தானும் உள்வாங்கிக் கொண்டு அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து அணில் போல் உதவிக்கொண்டு இருப்பவள்.
விஷ்ணு :
விவேக்கிடம் பணிபுரியும் ஓர் உதவிஅதிகாரி. கிட்டத்தட்ட விவேக்கின் நிழல்.பேசும் பேச்சில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் விஷயம் இருக்கும். மூச்சுத் திணற வைக்கும் சிக்கலான நேரங்களில் ஆக்ஸிஜனாய் இருப்பவன்.
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்ப
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்படும் ஸ்பெஷல் க்ரைம் டிவிஷன் ஆஃபீஸர். SCD என்பதின் விரிவாக்கம் Special Crime Division என்பதாகும். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சீரியஸ் க்ரைம்ஸ் Serious Crimes எதுவாக இருந்தாலும் சரி, அதை இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் ஒரு எஸ்.சி.டி ஆஃபிஸரின் பணி.அதைத்தான் விவேக் இப்போது செய்து கொண்டிருக்கிறார். என்றுமே இளமையாய் இருப்பதால் விவேக்கின் பிறந்த தேதி, வருடம் பற்றி நீங்கள் யாரும் கேட்க அனுமதியில்லை.
ரூபலா:
ஹோம் சயின்ஸ் படித்த அதி அழகான ரூபலாவிற்கு காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை.ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், அந்த ஆசை நிராசையாகிவிட விவேக்கின் திறமையை காதலித்து மிஸஸ் விவேக்காக மாறியவள்.விவேக் துப்பறியும் மிகவும் சிக்கலான வழக்குகளை தானும் உள்வாங்கிக் கொண்டு அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து அணில் போல் உதவிக்கொண்டு இருப்பவள்.
விஷ்ணு :
விவேக்கிடம் பணிபுரியும் ஓர் உதவிஅதிகாரி. கிட்டத்தட்ட விவேக்கின் நிழல்.பேசும் பேச்சில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் விஷயம் இருக்கும். மூச்சுத் திணற வைக்கும் சிக்கலான நேரங்களில் ஆக்ஸிஜனாய் இருப்பவன்.
சர்ப்ப வியூகம்
அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை.
முதல் கதை...
ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வ
சர்ப்ப வியூகம்
அமானுஷ்யத்தை மையமாக கொண்ட இரண்டு கிளை கதை.
முதல் கதை...
ஹரியும் ஜெயாவும் இளம் தம்பதிகள், ஊட்டி செல்லும்போது அவர்களுடன் பயணிக்கிறான்,ஜெயாவின் எட்டு வயது தம்பி வருண். அங்கு சென்றவுடன், அவன் நடவடிக்கைகள் வித்தியாசமாக அமைகின்றன.முதலில், அவற்றை கவனிக்காமல் விடும் ஹரிக்கு அதுவே பெரிய பிரச்சனையாக மாறி பின் விபரீதமாக உருவெடுக்கிறது.
இரண்டாவது கதை...
ஊட்டியில் உள்ள பெரிய செல்வந்தரின் மகள் துர்காவும், சென்னையில் உள்ள தொழிலதிபரின் மகன் வல்லப்பும் காதலிக்கிறார்கள்.ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.ஆனால், திருமணம் செய்தால் விபரீதம் நிகழும் என எச்சரிக்கிறார் குடும்ப ஜோதிடர்.
ஏதோ நடக்கிறது..!
உளவியல் பேராசிரியர் அமிர்தவர்ஷிணி ஜூபிடர் டிவி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சிக்கு பங்கேற்க செல்கிறாள்.கடைசி நேரத்தில், அந்த அரங்கத்தில் பங்கேற்பவர்கள் சிலர் மனநோயாளிகளாக இருந்து சமீபத்தில் குணமானவர்கள் என அறிந்து முதலில் அதிர்கிறாள்.பின்பு அவளின் அபரிமிதமான துணிச்சல் காரணமாக அதை ஒத்துக்கொள்கிறாள்.ஆனால், அந்த நிகழ்ச்சியின் தொடக்கமே யாரும் எதிர்பாராத விபரீதத்துடன் ஆரம்பிக்கிறது.அரங்கமே அதிர்கிறது.ஸ்தம்பிக்கிறது.
இந்த இரண்டு கதைகளிலும் உளவியலையும் அமானுயுஷ்த்தையும் அறிவியலோடு சரிவிகிதத்தில் கலந்து தந்திருக்கிறார்...உங்கள் அபிமான எழுத்தாளர்.
Velvet Crimes is a thriller written in the backdrop of a missing Malaysian Airlines flight.
A chain of events occurs when an Indian Embassy personal gets key information about the missing flight. Different groups officially and unofficially try to access the classified and confidential codewords related to the event.
What is the fate of the missing flight? Till now there is no solid proof.
Did it end up submerged into the ocean due t
Velvet Crimes is a thriller written in the backdrop of a missing Malaysian Airlines flight.
A chain of events occurs when an Indian Embassy personal gets key information about the missing flight. Different groups officially and unofficially try to access the classified and confidential codewords related to the event.
What is the fate of the missing flight? Till now there is no solid proof.
Did it end up submerged into the ocean due to technical issues or was it hijacked by terrorists or was it a suicide mission?
Here comes a Master piece Novel from Legend writer and famous Tamil crime novelist Rajeshkumar's Imagination.
Read it to unearth the mystery.
கருநாகபுர கிராமம்
கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது அந்த வழக்கு.
இதற்குமுன், அந்த வழக்
கருநாகபுர கிராமம்
கருநாகபுர கிராமத்தில் அடுக்கடுக்கான மரணங்கள்.. அதுவும் மர்மமான முறையில். காரணம் அறியாமல் கைவிடப்படுகிறது அந்த வழக்கு.
இதற்குமுன், அந்த வழக்கை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரிகள் உயிருடன் திரும்பியதில்லை என்ற அபாயம் அறிந்தே கருநாகபுர கிராமத்திற்கு செல்கிறார் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர், சந்தோஷ்.
விசாரணை ஆரம்பித்த சில மணிநேரத்திலேயே சந்தோஷூக்கு அமானுஷ்யமான, ஆச்சரியமான நிகழ்வுகள் மற்றும் எதிர்பாராத சந்திப்புகள் நடக்கின்றன.
கருநாக சித்தரின் சாபம், கலியுகன் மற்றும் கலியுகம் பற்றிய கதைகள் என அவர் கேள்விபடும் விஷயங்கள் எல்லாமே, மேலும் மேலும் விசாரணையின் கோணத்தை
திசை மாறச் செய்கிறது.இவற்றையெல்லாம் நம்பலாமா இல்லை நம்பக்கூடாதா
என தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளின் உண்மைதன்மை அறிய போராடுகிறார்.
அந்த போராட்டம், அதன் விளைவுகள், உங்களை திடுக்கிட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சிவப்பின் நிறம் கருப்பு
நெடுஞ்சாலையில் சாலை விபத்தால் காயமடைந்த நபரைப் பற்றி போலீஸ்க்கு தெரிவிக்கிறாள், துணிச்சல் மிகுந்த இளம் பெண்டாக்டர் அருணா. ஆனால், அதுவே பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என கனவிலும் நினைத்திருக்கமாட்டாள்.
விபத்தில் சிக்கிய நபருக்கும் அருணாவுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் முதற்கட்ட விசாரணையில் கிடைக்கின்றன. அதை மறுக்கிறாள் அருணா. ஆனால், காவல்துறை அதிகாரிகளின் விசாரணை அவளை நோக்கி பாய்கிறது.
அதே நேரத்தில்,வித்தியாசமான முறையில் தொடர் கொலைகள் நடக்கின்றன. அது காவல்துறைக்கு பெரும் சவாலாக அமைகிறது. அதன் ஆதியும் அந்தமும் புரியாமல் அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்கிறார்கள்.
குற்றவாளி யார் என அறியும்போது நீங்கள் அதிர்ச்சியில் மீள சிலமணிநேரம் ஆகலாம்.
கிலியுகம்
கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அ
கிலியுகம்
கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அப்போது சில ஆச்சரியமான அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்க்கொள்கிறார்.
அதே சமயத்தில்,
அரசாங்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவருக்கு நேரும் பிரச்சனைகள். அவர்களுக்கு சம்பந்தபட்ட அனைவரும் அதன் காரணம் அறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். போலீஸ் துறை அனைத்து திசையிலும் விசாரணையை முடுக்குகிறது.
குற்றவாளியை நெருங்க முடிந்ததா…?
கதை இரண்டு கிளைகளாக தனித்தனியே பயணிக்கிறது. அவை ஒன்றிணையும்போது நாம் திடுக்கிடுவதை யாராலும் தடுக்கமுடியாது.
உயிர் உருகும் சத்தம்
இரண்டு பத்தரிகையாளர்கள் திண்டல் கிராமத்தில் நடக்கும் அமானுஷ்யமான விஷயங்களை பற்றி கேள்விப்பட்டு, ஆய்வு கட்டுரை ஒன்றை செய்ய அந்த கிராமத்திற்கு வருகிறார்கள்.அவர்கள் கேள்விப்பட்ட வீட்டின் அதிசய சக்தியை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். இப்படியும் நடக்குமா என்று அதிர்கிறார்கள்.
சென்னையில் மர்மமான முறையில் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்கும் பொருட்டு போலீஸ் விசாரணை நடைப்பெறுகிறது. ஆனால், பல அதிர்ச்சிகரமான திருப்பங்கள், நிகழ்வுகள் நடக்கின்றன. அதனால், விசாரணை குழப்பமான சூழ்நிலையை அடைகிறது.
அது ஏன் நடக்கிறது…? எதற்காக நடக்கிறது…? என்ற கேள்விகளுக்கு முதல் கிளை கதை பதிலளிக்கிறது.
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபீஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD
விவேக்:
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபீஸராக பணி புரிந்த விவேக், தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துறையில் SCD எனப்படும் ஸ்பெஷல் க்ரைம் டிவிஷன் ஆஃபீஸர். SCD என்பதின் விரிவாக்கம் Special Crime Division என்பதாகும்.
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சீரியஸ் க்ரைம்ஸ் Serious Crimes எதுவாக இருந்தாலும் சரி, அதை இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் ஒரு எஸ்.சி.டி ஆஃபிஸரின் பணி.அதைத்தான் விவேக் இப்போது செய்து கொண்டிருக்கிறார்.
என்றுமே இளமையாய் இருப்பதால் விவேக்கின் பிறந்த தேதி, வருடம் பற்றி நீங்கள் யாரும் கேட்க அனுமதியில்லை.
ரூபலா:
ஹோம் சயின்ஸ் படித்த அதி அழகான ரூபலாவிற்கு காவல்துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை.ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால், அந்த ஆசை நிராசையாகிவிட விவேக்கின் திறமையை காதலித்து மிஸஸ் விவேக்காக மாறியவள். விவேக் துப்பறியும் மிகவும் சிக்கலான வழக்குகளை தானும் உள்வாங்கிக் கொண்டு அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து அணில் போல் உதவிக்கொண்டு இருப்பவள்.
விஷ்ணு :
விவேக்கிடம் பணிபுரியும் ஓர் உதவிஅதிகாரி. கிட்டத்தட்ட விவேக்கின் நிழல்.பேசும் பேச்சில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் விஷயம் இருக்கும். மூச்சுத் திணற வைக்கும் சிக்கலான நேரங்களில் ஆக்ஸிஜனாய் இருப்பவன்.
ஒருபுறம் அன்பான பாசமான கணவர், இன்னொருபுறம் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாய்தந்தை,மறுபுறம் தன்னை பெற்றமகளாய் பார்க்கும் மாமனார் மாமியார்.
இவர்களுக்கு மத்தியில் ஓர
ஒருபுறம் அன்பான பாசமான கணவர், இன்னொருபுறம் தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாய்தந்தை,மறுபுறம் தன்னை பெற்றமகளாய் பார்க்கும் மாமனார் மாமியார்.
இவர்களுக்கு மத்தியில் ஓர் அழகான இளம்பெண்ணான வளர்மதி தன்னுடையே அலுவலகப் பணியைப் பார்த்துக்கொண்டே போலீஸ் இன்ஃபார்மராகவும் பணியாற்றுகிறாள். போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கு பல வழக்குகளில் உதவியாக இருந்து அவற்றை வெற்றி பெறச் செய்கிறாள்.
இவள் போலீஸ் இன்ஃபார்மராக இருப்பது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு யாருக்கும் தெரியாது.
இப்போது விபரீதங்கள் நிறைந்த ஒரு சர்வதேச பிரச்னை ஒன்று காவல்துறைக்கு சவால் விடுகிற து. ஆனால்,யாருக்கும் பயப்படாமல் தன் சாதுர்யத்தால் சமார்த்தியமாக ஒரு சதுரங்க ஆட்டம் ஆடுகிறாள்.
வெற்றி கைக்கு எட்டியதா?
இந்த கனமான நாவலின் ஒவ்வொரு பக்கமும் உங்களுடைய இதயத்துடிப்பை எகிற வைக்கும்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.