இந்த விவிலிய கிரேக்கமொழி எழுத்து பயிற்சி புத்தகம் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விவிலிய மூலமொழிகளை கற்றுகொள்ள விரும்புகிற அனைவருக்கும் எளிமையாக புரிந்து எழுத்துப்பயிற்சி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புத்தகம். அடிப்படை வார்த்தைகள் யாவும் தேவைகேற்ப கிரேக்கம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கொடுக்கபட்டிருக்கிறது. எழுத்து பயிற்சியோடு எழுத்துக்களின் சரியான ஒலிக்குறிப்புகளும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கிரேக்கமொழி எழுத்துக்களின் பெயர் மற்றும் எழுத்தின் ஒலிக்குறிப்புகள் நேரடியாக கிரேக்கக் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யபட்டிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இது விவிலிய கிரேக்க மொழி கற்க ஆசைப்படும் அத்தனைபேரும் வைத்திருக்கவேண்டிய அடிப்படை புத்தகம்.