மாதவிடாய் பருவத்திலுள்ள பெண்கள் ஏன் சபரிமலைக்குள் நுழையக் கூடாது என்று கேள்வி எழுப்பிய அனைவருக்குமான பதிலே இந்தப் புத்தகம். சபரிமலைக் கோவிலில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் பற்றி இதுவரை விவாதிக்கப்படாத கோணத்தை இப்புத்தகம் முன்வைக்கிறது. சபரிமலையுடன் தொடர்புடைய ஐந்து கோவில்களுக்குச் சென்ற நூலாசிரியரின் நேரடி அனுபவத்தையும், அது அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். நமதுநாட்டு பாரம்பரிய அறிவியல் முறைகளான ஆயுர்வேதம், சக்கரங்கள், தந்திரம், ஆகம சாஸ்திரம் ஆகியவற்றின் மூலம் கோயிலின் தன்மையை விளக்கி, சபரிமலை பற்றி ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட அரிய புத்தகம் இது. அதே சமயத்தில் வாசகர்கள் இந்த ஆழமான அறிவியலை எளிமையாகப் புரிந்துகொள்வதற்கும் சபரிமலை போன்ற கோவில்கள் மனித உடல், குறிப்பாகப் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் தெரிந்துகொள்ள ஆசிரியரின் தனிப்பட்ட அனுபவமே உதவுகிறது. இந்தப் புத்தகம், இந்துக் கோவில்களையும் குறிப்பாகச் சபரிமலையும் உணர்ந்து அனுபவிக்கும் விதத்தை மாற்றும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners