கோவை மாவட்டம் அவினாசி என்னும் ஊரைச்சேர்ந்த முதுநிலை பட்டதாரியான, அடிப்படையில் ஒரு கிராஃபிக் டிசைனர் மற்றும் சிறந்த ஓவியர், இவர் தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். தற்போது சிறு சிறு கதாபதிரங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார்.
இவருக்கு சிறு வயதிலிருந்தே நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. கவிதைகள் வாசிப்பதும் எழுதுவதும் மிகவும் பிடிக்கும்.
அவ்வப்போது எழுதி வைத்த கவிதைகளைத் தொடக்கமாகக் கொண்டு ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த கதை.