கருந்துளையையும் வெண்துளையையும் தனித்தனியாகப் பார்க்காமல் சேர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமான கோட்பாடுகள் கிடைக்கும். கருந்துளை அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது எனவே அதை நுழைவு வாயில் என்று வைத்துக் கொள்வோம், வெண்துளை அதனுள் இருக்கின்ற அனைத்தையும் வெளியேற்றுகிறது எனவே இதை வெளியேற்று வாயில் என வைத்துக் கொள்வோம். இதனை வைத்து கருந்துளையில் நுழைந்து வெண்துளையின் வழி வெளிவருவதன் மூலம் காலத்தையோ, தூரத்தையோ கடக்க முடிந்தால்?