இத்தொகுப்பின் கவிதைகள் ஆம், கவிதைகள் நொந்த மனதின் காய வலியென எரிகிறது . எரிச்சலை மறைக்க பார்க்கக் கிடைத்த பச்சை போன்றும் சில உள்ளே உள்ளது . பொதுவாக உணர்ச்சியின் வெளிப்பாடென கவிதையைக் கூறுவோர் மத்தியில் உணர்ச்சியோடியைந்து சிந்தையும் சேர்ந்து வரிகளை வடித்திருக்கிறது .
இனி இரவிக்குமாரின் குரல் மட்டுமின்றி விரலும் ஒடுக்குமுறைக்கெதிராய் உரக்க பேசுமென்பது நிதர்சனம் .