Share this book with your friends

Visaaram / விசாரம்

Author Name: Yugapiramman | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“உலக பிரசித்தி பெற்ற பிரபல மனோதத்துவ நிபுணர் முதன்முதலாக சந்திக்கும் ஒரு வினோத வழக்கு! ஒருவனுக்கு ஒரு கனவு வருகிறது..அது தொடர்ச்சியாக பத்து ஆண்டுகள் அவனை விரட்டுகிறது!...அந்த கனவில் அவன் ஒரு பெண்ணுக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கும் நிலையில் கனவு துண்டிக்கப் படுகிறது..அந்த சத்தியத்தை நிறைவேற்றி கொடுக்க பலமுறை, பல வழியில் அந்த கனவுக்குள் செல்ல முயற்சிக்கிறான்..ஆனால் அவனால் அது முடியவில்லை..கனவை கனவாக நினைத்து இயல்பாக இல்லாமல், அந்த கனவில் அவன் செய்து கொடுத்த வாக்கினை உண்மை என்று தீர்க்கமாக நம்பியதால், அதை நிறைவேற்ற எவ்வளவோ போராடுகிறான்..அதற்கு முட்டுகட்டையாக இருக்கும் அவன் மனைவி, நண்பன், மருத்துவர் யாராக இருந்தாலும் அவர்களை கொல்லும் நிலைக்கும் தள்ளப்படுகிறான்..இறுதியில், அவன் அந்த கனவு உலகுக்கு சென்றானா? அவன் செய்து கொடுத்த வாக்கினை நிறைவேற்றினானா? மீண்டும் உயிரோடு நிஜ உலகிற்கு திரும்பினானா? உளவியில் வியாதிக்கு நவீன மருத்துவம் கை கொடுத்ததா? என்ற பல கேள்விகள், திகில், பயம், மர்மம், பீதி, அச்சம் என பல கோணங்களுக்கு விடை சொல்வதுதான் “விசாரம்” என்னும் நாவல்!”...

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

யுகபிரம்மன்

நாவலாசிரியரைப் பற்றி...

நாவலாசிரியரின் இயற்பெயர் சுப்ரமணியன்...பெற்றோர்கள்: காந்தி – வள்ளியம்மாள். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கீழ்கரிப்பூர் கிராமம்..வழக்கறிஞர், கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், வரலாற்று நாவலாசிரியர் என பன்முகத் தோற்றம் கொண்டவர்..

இவரின் சிம்ம கர்ஜனை என்னும் வரலாற்று நாவலை, புகழ்பெற்ற “வானதி பதிப்பகம்” 2022 இல் வெளியிட்டுள்ளது..அதேபோல் “சோழ சிங்காதனம்” என்னும் கரிகால சோழசக்கரவர்த்தியின் வரலாற்றைக் கொண்ட நெடிய  ஐந்து பாக நாவலும் அச்சில் உள்ளது!.

“கனவுகள் விற்பவன், வச்சூத்தி, உனக்கென்று என் இதயம், கூன் காலம், வலியின் குறுநகை,முதலிய கவிதை புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார். 

2020 முதல் 2022வரை “கவிமாமணி விருது, வெற்றித் தமிழன் விருது, உ.வே.சா. விருது, சாதனையாளர் விருது” போன்ற பல விருதுகளை பல்வேறு அமைப்புகள் மூலம் இவருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது!..

இவரின் உருவாக்கத்தில் வெளியான உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், சுர்முகி ஆகியோர் பாடிய பக்தி ஆல்பங்கள் “மலையே மகேசா” “பஞ்சபூதன்” ஆகியவை சரிகம ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது!

Read More...

Achievements

+1 more
View All