"ஆசீா்வாதமான கிறிஸ்தவ வாழ்வு" என்னும் இப்புத்தகம் பூமிக்குாிய நம்முடைய வாழ்வை நாம் எங்ஙனம் நமக்கும், பிறருக்கும் பிரயோஜனமுள்ளதாய் வாழமுடியும் என விளக்குகிறது. இப்புத்தகத்தில் நம்முடைய அன்றாடக வாழ்வில் வரக்கூடிய சோதனைகள், தடைகள், கடன் என்னும் பிரச்சனை, தீமையான காாியங்கள் போன்றவற்றை எங்ஙனம் மேற்கொள்ளுவது என்பதை உண்மைச் சம்பவங்கள் மற்றும் வேத ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பொிய காாியங்களைச் சாதித்தல், முதிா்வயதிலும் ஆசீா்வாதமாய் இருத்தல், மரணபயத்தை மேற்கொள்ளுதல் போன்ற காாியங்கள் இப்புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.