காதல் மகத்துவமானது; நம்மில் அது உண்டாக்கும் கதிரியக்க விளைவுகள் கணக்கில் அடங்காதவை. சிலரை அதனால் கவிஞர் ஆக்கவும் முடியும், பலரை காவியமாக்கவும் முடியும்.
என்னிலும் பலமுறை இந்த காதல் அடிக்கடி வந்துப் போவதுண்டு. காதல் தானே, வந்து விட்டு போகட்டுமே என்றெண்ணினால் ஒவ்வொரு முறையும் சில கவிதைகளையும் பல கண்ணீர்த்துளிகளையும் பரிசளித்தே அது செல்கிறது.
கவிதைகளையும் கண்ணீர்த்துளிகளையும் ஒருங்கே என் இதயத்தில் வைத்துக் கொள்ள இடமின்றி கண்ணீர்த்துளிகளை மட்டும் எனக்கானதாய் வைத்துக் கொண்டு கவிதைகளை உங்களுக்காக இங்கு சமர்ப்பிக்கிறேன்.
சிலவற்றை என்னால் கூட கவிதையாய் ஒப்புக் கொள்ள இயலாவிடினும், அழகு தமிழ் அதன் மீது ஒரு சொர்ணப் பூச்சை செய்து கொஞ்சம் அழகாக்கி விடுகிறது. கவிதையாய் இல்லாவிடில் என்ன, அழகு தமிழை கொஞ்சம் ரசித்து விட்டு போவோமே!