வணக்கம். உங்கள் கைகளில் தவழ்வது எனது ஏழாவது படைப்பு. நமது முன்னோர்கள் தேர்ந்த அறிவாளிகள், பல்வேறு விஞ்ஞான, மருத்துவ உண்மைகளைச் சம்பிரதாயங்கள் என்ற போர்வையில் போதித்தவர்கள். அதில் உளவியலையும் – உணர்வியலையும் கலந்து வாழ்வியலுக்குத் தேவையான நடைமுறைகளையும் சேர்த்து ஊட்டினார்கள். காலப்போக்கில் அதில் சில பிற்சேர்க்கைகள் சேர்ந்து அதனை நீர்த்துப் போகச் செய்துவிட்டன. காரணம்… மேலைநாட்டுக் கலாச்சாரம்!
இதனைப் பின்பற்றினால்தான் சமூகத்தில் அந்தஸ்து கூடும் என்ற தவறான அபிப்பிராயம். எனவே, ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என மேலைநாட்டுக் கலாச்சாரமும், நமது கலாச்சாரமும் இணைந்ததில் ‘‘கெமிஸ்ட்ரி’’ ஒர்க் அவுட் ஆகவில்லை. நமது பண்பாடுகள் வாக் அவுட் ஆகிவிட்டன! அதன் விளைவே இன்றைய பரபரப்பு! படபடப்பு!!
உதாரணமாக விளக்கேற்றி ‘‘ஆயுஷ் ஹோமம்’’ செய்து பிறந்தநாள் கொண்டாடிய நாம் மெழுகுவர்த்தி அணைத்து, கேக் வெட்டிக் கொண்டாடுகிறோம். அம்மி மிதித்து அரசாணைக்கால் நட்டு திருமணம் நடத்துவது மாறி பதிவுத் திருமணம். ஆண்டவனையே ‘‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிக் கொண்டாடிய நாம், இன்று காதலர் தினம் கொண்டாடுகிறோம். அப்படிக் கொண்டாடும் நாம் அனுசரிப்பது கெளரவக்கொலை, ஆசிட் வீச்சு, அரிவாள் வெட்டு! ஏன் இந்த முரண்பாடு?”
இப்படி முரண்பட்ட வழக்கங்களை மாற்றி முறையான நெறிகளைக் கடைப்பிடிக்கத் தூண்டும் முயற்சியே இந்த நூல்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners