இந்த கதை,ஒரு பெண்ணின் கதை.அவலமான நிலையில் இருக்கும் பெண்களின் கதை,கொடுமைகளை சந்திக்கும் ஒருத்தியின் கதை.இந்த உலகம் பெண்களால் உருவாக்கப்பட்டது,ஆனால் அந்த பெண்களுக்கு நடக்கும் தீங்குகளை எடுத்துரைக்கும் ஒரு சராசரி பெண்ணின் கதை.
தமிழ் மீது கொண்ட பற்று,புத்தகங்கள் மீது ஏற்பட்ட காதல் என இரண்டும் சேர்ந்து என்னை ஒரு எழுத்தாளனாக்கி இருக்கிறது.நான் ஒரு இஞ்சினியர்.இது நான் புத்தகமாக வெளியிடும் மூன்றாவது கதை.
வேலை செய்துக்கொண்டு இருக்கும் போது,கிடைத்த நேரங்களில் வளைபதிவுகதிகளில் ஒரு சிறு நாவலாக இந்த கதையை எழுதினேன்.
எழுதிய போது கிடைத்த பாராட்டுக்கள் என்னை மேலும் தீவிரமாக எழுத வைத்தது.
புத்தகங்கள் எப்போதுமே விலைமதிப்பற்றது.
புத்தகங்கள் நம்மை சிந்திக்க செய்யும்.சில சிந்தனைகள் நம்முள் பல விதமான கிளர்ச்சிகளை உண்டாக்கும் வலிமை உடையன.அதே போல் இந்த கதையில் சில சிந்தனைகளையும் அதன் தாக்கங்களையும் என் பார்வையில் தர முயற்சி செய்துள்ளேன்.