பெஸ்டி எனது 13 ஆம் நாவல், இந்த கதைக்களம் எனது புது முயற்சி, நான் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து நிச்சயம் இது வேறுப்பட்டு இருக்கும். கொஞ்சம் 18 + விஷயங்கள் மற்றும் சில முரண்பாடுகளும் உண்டு அனைத்தும் முக சுழிப்பு இல்லாத அளவுக்கு தான். நம் நிதர்சன வாழ்வில், நாம் கடந்து செல்லும் மனிதர்கள் தான் இவர்கள் எல்லாம், ஆனால் அன்பு கிடைக்காதவர்கள். அன்பு தான் இங்கே கரு. வாசித்து பாருங்கள் நிச்சயம் பிடிக்கும்.
அன்பு அனைத்தும் செய்யும்.
நன்றி,
கௌரி முத்துகிருஷ்ணன்.