கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.
கண்களுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் இரவு படுக்கும் போது இந்த நீரை பஞ்சில் நனைத்து கண்களுக்கு கீழ் தடவி இலேசாக மசாஜ் செய்தாலே கருவளையம் நீங்கும். கருமை நிறம் மறையும்.
மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.
தினமும் கேரட்டினை சாப்பிட்டால் கரோட்டின் என்கின்ற உயரிய சத்து புற்று நோய் செல்களை கட்டுப்படுத்துகின்றன.