Share this book with your friends

Child Development and Pedagogy - Psychology / குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - உளவியல் தாள் I மற்றும் தாள் II

Author Name: Dr.s.palavesakrishnan | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

  தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்காக “குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்” என்ற இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஐந்து பாடப்பகுதிகள் உள்ளன. ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ளே ஏராளமான தலைப்புகளில் பாடக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. உளவியல் அறிஞர்கள், மற்றும் அவர்கள் செய்த சோதனைகளின் புகைப்படங்களை  ஆசிரியர்கள் பார்க்கும் பொழுது உளவியல் கருத்துக்கள்  மனதில் நிலைத்து நிற்கும் படியாகவும், பொருத்தமான படங்களுடன் உளவியல் பாடக்கருத்துக்களை ஆசிரியர்கள் எளிதில் புரிந்து கற்றுக் கொள்ளும் வகையில் சீரிய நடையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

“குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் என்னும் இந்நூலைப் படைத்ததன் முதன்மையான நோக்கமே  தனியார் கல்வி நிலையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பதே.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

முனைவர். சு. பலவேசகிருஷ்ணன்,

நூல் ஆசிரியர் குறிப்பு

முனைவர் சு. பலவேசகிருஷ்ணன், வணிகவியலில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களை பாளையங்கோட்டை,  தூய  யோவான்  கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும், சதகத்துல்லா  அப்பா  கல்லூரியில்  (தன்னாச்சி) வணிகவியலில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டமும் பெற்றார். பின்னர் கல்வியியலில் இளநிலை பட்டத்தை கடம்போடுவாழ்வு, செயின் ஜோசப் கல்வியியல் கல்லூரியிலும், கல்வியியலில் முதுநிலை பட்டத்தை வீரவநல்லூர், செயின்ட் ஜான்ஸ் கல்வியியல் கல்லூரி, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 

20க்கும் மேற்பட்ட கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்டு 10க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை சமர்பித்துள்ளார்.

100க்கும் மேற்பட்ட இனைய வழி கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். தினமலர் நாளிதழில் மாசற்ற போகி என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு உலக தமிழர் பண்பாட்டு சங்கம் நல்லாசிரிய மாமணி விருது வழங்கி கவுரவபடுத்தியுள்ளது. மற்றும் நதிகள் அறக்கட்டளை சார்பாக தேசத்தின் சிற்பி மற்றும் காமராஜர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இவர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் 2021ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின்படி B.Ed முதல் பருவ தேர்வெழுதும் மாணவர்களுக்காக கல்வி உளவியல் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்.

Read More...

Achievements

+7 more
View All