கிறிஸ்துவுக்குள் அன்பான சுவடுகள் வாசகர்களே,
ஆண்டவரும், மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் வரலாற்றுச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்அறிய வகை புத்தகங்களை சேகரித்து பாதுகாத்தும், டிஜிட்டல் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றோம். நாம் செய்யவேண்டிய பணிகள் இன்னும் அநேகம் உண்டு. மறந்த, மறைந்த மறக்கப் பட்ட வரலாற்றுச் உண்மைகளை இன்றைய இளைஞர்களுக்கும் எதிர்கால திருச்சபை மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆக்கபூர்வமாக செயல்வடிவம் கொடுப்போம்.
இம்மாத இதழானது “புதிய சபைகளுக்கான தலைவர்களை உருவாக்குவதில் வரலாற்று மாதிரிகள்” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரைகளையும் தலைசிறந்த நாவல்களையும், வரலாற்றுக் உண்மைகளையும் கொண்டு வந்துள்ளது.
வரும் நாட்களில் இன்னும் சிறந்த ஆய்வுகளுடன் வரலாற்றுச் இதழ் கொண்டு வர முயன்று வருகின்றோம். உங்கள் பகுதிகளில் உள்ள வரலாற்றுச் செய்திகளை எழுதி அனுப்புங்கள். ஆய்வாளர்கள் ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும் தலைப்பின் கீழ் எழுதி அனுப்ப கேட்டுக் கொள்ளுகின்றேன். ஒவ்வொரு மாதமும் இதழினை வெளிக்கொண்டுவருவதற்கு மிகுந்த பொருட்செலவுகள் உண்டு, தேவைகள் சந்திக்கப்பட ஜெபித்துக்கொள்ளுங்கள். சந்தா, நன்கொடைகளை அனுப்ப இதழின் பக்கங்களிலிருக்கும் வங்கிக் கணக்குகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நண்பர்களுக்கு இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி அவர்களை சந்தாதாரர்களாக்குங்கள். தொடர்ந்து வரலாற்று ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
வரும் நவம்பர் மாத தலைப்பாக “அன்றைய அர்ப்பணிப்பும், இன்றைய சவாலும்” என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரைகளை எழுதி அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.