திரவியம் நிறைந்த இடம் தான் திராவிடம்.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு, ஆனால்
திராவிடத்தை தேடாதே !
தமிழ் எண்களை அரேபியர்களுக்கு தாரைவார்த்து விட்டு
போதாது என்பதால் தமிழ் அறுபது ஆண்டுகளையும்
ஆரியர்களுக்கு தாரைவார்த்து விட்டார்கள்.
கருவறையில் உள்ள ஆகமவிதிகள் தான் கொரோனா
காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது, அப்போ கொரோனா
வைரஸ் என்ன பார்ப்பனர்களின் ஜாதியா அல்லது
கொரோனா தீட்டு பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டதா ?
மருத்துவர் சொன்னா மகத்துவம், பார்ப்பனர் சொன்னா
அபத்தம்மா, பெரியாரே ?
ஒன்பது ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தும் கூட
பெரியாரின் பொன்மொழிகளுக்கு உண்டான தடை
நீக்கப்பட வில்லை,
கேட்டால் இது பெரியார் மண்…
கலைஞரின் வாரிசு அரசியல் கூட ஒரு விதமான குல
கல்வித் திட்டம் தான் பெரியாரே !
தன் குலத்தொழில் செய்ய கிருஷ்ணர் என்ன தேரோட்டி
ஜாதியில் பிறந்தாரா பெரியாரே ?
பன்றிகளுக்கு பூணூல் அணிவித்தவர்கள் தான் அனைத்து
ஜாதியின் அர்ச்சகர்களுக்கும் பூணூலே அணிவித்தார்கள்,
அப்போ ஆவணி அவிட்டத்தில் அறுக்க வேண்டியது எதுப்
பெரியாரே ?
சம்பூகன் தவம் செய்த சொர்க்கவாசலுக்காக…
சூத்திரன் என்ற காரணத்தால் மூடப்படுவது என்றால்,
அப்போ அதே வைக்குண்ட ஏகாதசிக்கு
ஆயிரக்கணக்கான சூத்திரர்கள் எப்படி சொர்க்கவாசலை
கடந்து செல்கிறார்கள் பெரியாரே ?
திராவிடர் என்றால் சூத்திரன், அப்போ
திராவிட சிசு ஆதிசங்கரர் யார் பெரியாரே ?
பெரியார் தலைமையில் குழந்தை திருமணம்
நடைப்பெற்றதால் பகுத்தறிவு பகலவன் மேல்
போக்சோ சட்டம் பாயுமா தோழரே ?
தமிழகத்தில் உள்ள 72 இலட்சம் டாஸ்மாக் குடிகாரர்கள்
எப்படி பணியிடத்தில் தன் குடியை கெடுத்தார்களோ,
அவ்விடத்தில் குடியமர்த்தப் பட்டவர்கள் தான்
வடமாநிலத்தவர்கள், கேட்டால் வடக்கு வாழ்கிறது தெற்கு
தேய்கிறது, ஏன் என்றால் ?
இங்கே திராவிட மாடல் மட்டும் வாழ்கிறது, தமிழகம்
தேய்கிறது பெரியாரே !
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners