அ. தொட்டராயசுவாமி
கணினி ஆய்வியல் நிறைஞரான திரு. அ. தொட்டராயசுவாமி M.C.A., M.Phil., B.Ed., தமிழ்மீதான மீளாதப் பற்றால் 2003 முதல் இன்று வரை தன் கவிதைகளாளும், தன்னம்பிக்கை வரிகளாளும் வாசகர்களை தன் வசம் வைத்திருக்கும் கணினியியல் ஆசிரியர் ஆவார்.
இவருடைய தமிழ் மீதான ஆர்வத்திற்கு காரணமாக இருந்தவர் தந்தையார் திரு. பொ. அழகிரிசுவாமி முன்னாள் இரானுவ வீரராவார்(எண் 24 வீரபாண்டி), ஆரம்ப கால கவிதைகளின் வாசகர்களில் ஒருவராக இருந்தவர் இவருடைய அன்னையார். திருமதி. கொண்டம்மாள் ஆவார்.
2004ல் தன் முதல் பேராசிரியர் பணியை தான் படித்த ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலேயே (ஓனாபாளையம்) தொடங்கினார். மாணவர்கள் மத்தியில் இவரின் தன்னம்பிக்கை கவிதைகள் மிக பிரபலமாக இருந்தது. தமிழ் வலைத்தளங்களில் தொடர்ந்து கவிதைகள் கட்டுரைகள் போன்றவற்றை "விடங்கன்" என்ற புனைப்பெயரில் எழுதி வந்தார்.
தமிழ்மணம் இணையத்தளதின் 2005 & 2006 ம் ஆண்டிற்கான சிறந்த 100 வலைத்தளங்களில் இவரது வலைத்தளமும் இடம் பெற்றது குறிப்பிடத்தற்கது. மேலும் தேன்கூடு, தமிழ்மன்றம் போன்ற இணையத்தளங்களிலும் இவரது கவிதைகள் இணைய வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்டது.
எழுத்து.காம் இணையத்தளத்தில் இவரது கவிதைகள் இன்றும் இரசிக்கப்பட்டுவருகின்றது. இவரது இணையக்கவிதைகள் ஊரெல்லாம் உன் தூரல், குடைக்குள் மழை, சாம்பல் நிறத்து தேவதை என தலைப்பிட்டு தொகுக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2011 வரை ஜோதிபுரம் பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினித்துறையில் பேராசிரியராக பணியாற்றினார். ஒன்றிணைந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, செயல் விளக்க சொற்பொழிவுகள் போன்ற திறன் மேன்பாட்டு வழிமுறைகளை திறம்பட நடத்துவதில் திறமைமிக்கவராக இருந்தார்.
பின்னர், எண் .4 வீரபாண்டி, விவேகம் பதின்மப் பள்ளியில், கணினியியல் ஆசிரியராக தன் பணியை தொடர்கின்றார். எழுர்ச்சி பொங்கும் கவிதை, பேச்சு, அறிவியல் மற்றும் கணினிச் சார்ந்த கருத்தரங்குகளை பள்ளியிலும், சுற்றியுள்ள கல்லூரிகளிலும் திறமையான வண்ணம் நடத்திவருகின்றார்.
இவரது சேவையைப் பாராட்டி 2017ல் ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லூரி, கோவை, நடத்திய 25அம் NCSC ல் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் நேரு கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளை, குனியமுத்தூர், 2018ல் சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி கௌரவித்தது. மாணவர்களுக்கு பயன்படும் விதமாக இவரது திறன் மேன்பாட்டு சொற்பொழிவுகள் யூடூப் சேனல் alphabetacodeல் பதிவேற்றப்பட்டு மிகுந்த வரவேற்பு அடைந்தது.
அனைத்துவித பரிமாணத்திற்கும் உறுதுணையாக இவரின் துணைவியார் கல்வியில் இளநிலைப் பட்டதாரி (கணினி) ஆசிரியர் திருமதி. த. பூர்ணிமா M.A (Hindi) இருந்துவருகின்றார். இவரின் முந்தைய படைப்புகளான சாம்பல் நிறத்து தேவதை மற்றும் வானம் தாண்டியும் வெற்றி வாசகர் மத்தியில் பிரபலமான நூல்களாகும்.
email : thottaraya