ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தனிப்பட்ட சிறப்பு உள்ளது. இந்த புத்தகத்தின் மூலம் எண்களுக்கு உள்ள அம்சங்களை எழுதி உள்ளேன் ." ஒன்று - இந்த பிரபஞ்சமே ஒன்றாகும். ஒன்றிலிருந்து உலகம் உருவானது. உலகில் முதலானது ஒன்று. அது முழு முதற் கடவுள் ஆகும். அனைவருக்குள்ளும் உறையும் ஆன்மா ஒன்று. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' - என்ற கருத்து ஒன்றிலிருந்து தோன்றியது. அனைவருக்கும் தலை ஒன்று. நாட்டை ஆளும் தலைமை ஒன்று. வெற்றி பெற்றவன் செல்லும் இடம் ஒன்று. தலைக்கு சூடும் மகுடம் ஒன்று. ஒருமுறை வில்லில் இருந்து புலப்படும் அம்பு ஒன்று. ஒற்றுமை உருவாக்கும் செயல் ஒன்று. மனதில் தோன்றும் நம்பிக்கை ஒன்று. விழிகள் இரண்டானாலும் பார்வை ஒன்று. ".......