இந்நூலை ஆக்கிய முனைவர் த. ஜான்சிபால்ராஜ் அவர்கள் பாரம்பரியமிக்க நெல்லை திருமண்டல மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகின்றார். எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர் என பன்முகம் கொண்டவர்கள். சமூகம், பெண்ணியம், சுற்றுச்சூழல் சார்ந்த சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு கட்டுரைகளையும் அனுதின செய்திதாள்கள் மற்றும் இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். திருச்சபை சார்ந்த வரலாற்றுப் பணிகளிலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் வாசித்து புரிந்து கொள்ளும்படி வரலாற்றுப் புத்தகங்களையும் இவர் எழுதி வருகின்றார்.
இவர் எழுதிய நுல்களுள் சிறப்புக்குரியவை டோனாவூரின் நட்சத்திரங்கள், மாடும் வண்டியும், குயில்கள், அனைவருக்கும் இலட்சியம், ஆணின் அழகும் ஆளுமையும். மேலும் கிறிஸ்தவ வரலாற்றுச் சுவடுகள் மாத ஆய்விதளிலும் மிகப்பெரிய வரலாற்றுச் நாவல் ஒன்றும் மொழிபெயர்ப்பு கட்டுரைகளையும் எழுதி வருகின்றார்.
அந்த வரிசையில் அவர் இயற்றியுள்ள "வரலாற்றில் டோனாவூர்" நூலுக்காக நான் முதற்கண் பராபரனுக்கு நன்றி செலுத்துகின்றேன். இந்நூலை வடிவமைத்து வெளியிட வரலாற்றுச் சங்கத்திற்கு உரிமை வழங்கிய நூலாசிரியருக்கும், டோனாவூர் பெண்கள் ஐக்கிய சங்கத்திற்கும், திருச்சபை மக்களுக்கும் வருங்கால சந்ததிக்கு இந்நூல் ஒரு வரபிரசாதமாக இருக்கும் என்பதில், எள்ளளவும் சந்தேகம் இல்லை. கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம் சார்பாக அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.