இலக்கியம் ஒரு கால இயந்திரம். நம்மை வேறு ஒரு கால கட்டத்துக்கு கொண்டு சென்று விடும். இலக்கியம் படைக்க மட்டும் அல்ல, படிக்கவும் நிறைய கற்பனை வளம் வேண்டும். நாமும் நம் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தால், கற்பனை என்ற சிறகில், காலம் கடந்து, இன்னொரு உலகத்துக்கு நம்மை இந்த இலக்கியங்கள் கொண்டு செல்லுவதை நாம் உணரலாம். நம் அக உணர்வுகளை அழகாக படம் பிடித்து காட்டுவதில் தமிழ் இலக்கியங்கள் சிறந்தவை.