அழிவிலா, வாழ்வியல் தத்துவங்கள் அடங்கிய கருவூலங்கள் தான் உபநிடதங்கள். ஆதி அந்தமிலா பரம்பொருளை அறிய வழிவகுக்கும் பல்கலைக்கழகங்கள் அவை. அனைத்தும் ஈசனின் உறைவிடமே என்று தொடங்கும் முதல் மந்திரத்தால், ஈசாவாஸ்ய உபநிடதம் என்று பெயர் பெற்ற இந்த உபநிடதத்தின் தமிழாக்கமே இந்நூல்.
18 மந்திரங்களைக் கொண்ட இந்த உபநிடதம் பரம்பொருளான இறைவனின் (பிரம்மன் அல்லது பரபிரம்மன்) நீக்கமற நிறை தன்மையை அற்புதமாக விளக்குகிறது. பொறிபுலன் வழி வரும் சிற்றின்பங்களின் நிலையாமை, மெய்யறிவு காண துறவின் அவசியம் போன்ற விஷயங்களைப் பற்றி பேசுகிறது. அறம் வலியுறுத்தல், கர்ம யோகாவின் வாழ்க்கை சார்ந்த அணுகுமுறை, வாழ்க்கைப் பாதையில் அறிவு மற்றும் கர்மா என இரண்டும் கலந்த சமநிலை கொள்கைகளை கடைப்பிடித்தல், அதனால் வரும் நன்மைகள் பற்றிய வழிகாட்டுதல்கள் முதலிய ஆழமான உட்கருத்துகளை கோடிட்டுக் காட்டுகின்றது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners