It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
Kaathalum kaathal nimithamum / காதலும் காதல் நிமித்தமும்
Ratings & Reviews
Share:
Sorry we are currently not available in your region.
ஆயுதமொழியன்
ஆசிரியரின் இயற்பெயர் சிவக்குமார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக எழுத்துலகில் தன்னுடைய படைப்புகளை வெளியிட்டு வருகிறார். இதுவரை 9 கவிதைத் தொகுப்புகள், 5 குறுநாவல்கள் மற்றும் 1 சிறுகதை தொகுப்பு ஆகியவற்றை வெளியிட்டு உள்ளார். அக்ரிசக்தி மற்றும் கழனிப்பூ உள்ளிட்ட வேளாண் இதழ்களில் வேளாண்மை தொடர்பாக 70க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். பின்னர் கழனிப்பூ இதழில் துணை ஆசிரியராக பணியாற்றினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வேளாண் இளநிலை பட்டம் படித்ததுடன் அக்கல்லூரி நண்பர்களுடன் 'நாங்கள்' என்ற மாணவர் மின்னிதழை ஆரம்பித்து கடந்த மூன்று ஆண்டுகளாக அதன் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். உத்தரகாண்ட் ஜி.பி.பந்த் பல்கலை கழகத்தில் வேளாண் முதுநிலை பட்டம் முடித்து, தற்போது (2023) கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறார்.
இவர் மாநில அளவிலான எழுத்துப் போட்டிகளில் நான்கு முறை முதல் பரிசு பெற்றதும், தமிழ் இலக்கிய அறக்கட்டளையின் 'நா.முத்துக்குமார் விருதும், 'இளம் பாரதிதாசன் விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.