ஒரு விரல் நீளப் பையன் வான் உலகத்தில் இருந்து கீழே பூமியில் விழுந்து விடுகிறான். அவனை அவனது அம்மாவிடம் சேர்ப்பதற்காக 'வானக் குகை' வழியாக மாலுவும் பாலுவும் அழைத்துச் செல்கிறார்கள். வழியில் எட்டு பூதங்கள் இருக்கின்றன. மாயாஜால வித்தைகளையும் தங்களது மூளைகளையும் உபயோகித்து எவ்வாறு அந்த பூதங்களைத் தாண்டிச் செல்கின்றனர் என்பதுதான் கதை.
பல வண்ணச் சித்திரங்களுடன் எளிய தமிழில் உள்ள இந்தப் புத்தகத்தை சிறுவர்களுக்குப் பரிசளியுங்கள்; குழந்தை மனதுடைய பெரியவர்களும் வாசியுங்கள் :) :) :) நன்றி!