நன்மங்கலம் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பில் ராதா என்கிற நபரின் வாய் கிழிக்கப்பட்டு பற்கள் உடைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்படுகிறார். இந்த கொலையை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோருக்கு இதே போல மேலும் சில கொலைகள் நடக்கும் என உணர்ந்து அதைத் தடுக்க முயல்கினறனர். ஆனாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான முறையில் அடுத்தடுத்து கொலைகள் அரங்கேறுகின்றன. இக்கொலைகளை செய்பவர் யார்? எதற்காக செய்கிறார் ? என அகிலனும் ஜானும் கண்டுபிடித்தார்களா என்பதே மீதிக்கதை.