இந்தப் புத்தகம் பலருக்குப் பிடிக்காமல் போகும். படிக்க ஆரம்பித்த ஒரு சில பக்கங்களில் உங்களைப் படிக்க விடாமல் செய்யலாம். ஆனால் இதில் இருப்பது உண்மை. நீங்கள் உங்களையே பொய் பொய் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற பல விசயங்களின் உண்மை. நீங்கள் பார்க்கவே கூடாது என்று தைரியமாகக் கதவையும் சன்னலையும் இறுக்கச் சாற்றிக் கொள்ளும் உங்கள் வீட்டின் பின் சந்தில் நடக்கும் உண்மை. நீங்கள் இதைப் படிக்கும் போதும் அது நடந்து கொண்டு தான் இருக்கப் போகிறது. படித்து முடித்த பிறகும் அது நடந்து கொண்டுதான் இருக்கப் போகிறது.