இது ஒரு தமிழ்க் கவிதைத் தொகுப்பு. இந்த புத்தகத்தில், நாமகளின் அருளால் அடியேன் எழுதிய மரபுக் கவிதைகளும் புதுக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. அனைவருக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் வெண்பாக்களும் விருத்தங்களும் எழுதி இருக்கிறேன். அவை உங்களுக்குப் பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.
காதல், ஆன்மீகம் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களையும் கற்பனைகளையும் கனவுகளையும் இந்த புத்தகத்தில் கவிதை வடிவில் நான் தந்திருக்கிறேன். அவற்றில் பெரும்பாலானவை மரபுக் கவிதைகள்தான். தமிழ்ப் பற்றாளர்கள், காதலர்கள், சமூக சிந்தனையார்கள், ஆன்மீகவாதிகள், பக்தர்கள் மற்றும் இதர பொதுமக்கள் என அனைவரும் இந்தக் கவிதைத் தொகுப்பினை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.