நெல்லைத் திருச்சபையின் முதல் நூற்றாண்டுவரலாற்றில், அச்சபையினர் கொண்டிருந்த உள்நாட்டுச் சுவிசேஷ ஊழிய ஆர்வமும், வெளி உலக சுவிசேஷச் சேவைப்பற்றும் மேலும், பெரிய சபைகள் தோறும் 'சுவிசேஷக் கூட்டங்கள்', 'யாத்திரீகர் சங்கங்கள்', ஒவ்வொரு வட்டாரத்திலம் சுவிசேஷப் பணியாற்றிய 'அஞ்ஞான நேச சங்கங்கள்', பிரசங்கக் கூட்டங்கள்' முதலியவற்றை அமைத்து, 'உள் நாட்டுச் சுவிசேஷவேலை'யைத் தீவிரமாக நடத்தி வந்தனர் என்ற ஆதாரங்கள் ...
சபைகளின் ஆலய அபிமானம், ஆராதனை ஆசரிப்பு. பரிசுத்த வேத அறிவு, சிறுவரின் ஆவிக்குரிய வளர்ச்சி, கிறிஸ்தவ மக்களுக்குள் சிறந்து விளங்கிய விசுவாச உறுதி, பாவத்தின் மேலுள்ள வெறுப்பு, இவை கடந்த நூற்றாண்டில் நம் நெல்லைச் சபையில் சிறந்திலங்கிய கிறிஸ்தவ சீலங்களென்பது மிஷனெரி அறிக்கைகளிலும் நாட்குறிப்புகளிலும், கடிதங்களிலும் காணக்கிடைக்கிறது. தவிரவும், கல்விச் சேவை, சமூகப்பணி, மருத்துவச் சேவை, விவசாய அபிவிர்த்தி, கூட்டுறவுமுறை, பஞ்சநிவாரணம், குடிசைத் தொழில பிவிர்த்தி, கைத்தொழில் முன்னேற்றம், சுகாதார அறிவூட்டம், சாதிப்பேத ஒழிப்பு, அடிமைமுறை ஒழிப்பு, வாழ்க்கைத்தர உயர்வு, நாகரீகத்தில் தேர்ச்சி, இன்னுமிவை போன்ற வாழ்க்கை நலன்களையளித்து வந்ததுடன், முதல் நூறு ஆண்டுகளினிறுதியில் உயர்தரக் கல்விக்கூடங்கள் (Colleges). அங்கவீனர் கலாசாலைகள், தொழிற் கல்விக்கூடங்கள் போன்றனவற்றையும் நெல்லைச் சபை தன் மக்களுக்கும் நாட்டுக்கும் தந்துதவிவிய வரலாற்று நினைவுகள் ...
ஏராளமான அவ்வரலாறுகளில் ஒரு சிலவற்றை இந்நூலில் காணலாம்