இயற்கை எப்போதும் பல கண்டுபிடிக்க முடியாத மர்மங்களையும், எண்ணிலடங்கா ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும். அறிவியல் தொழில் நுட்பங்களின் வளர்ச்சி மனிதனின் நாகரீகத்தை அடுத்தடுத்த பரிமாணங்களுக்கு கொண்டு சென்றாலும், இயற்கை நமக்களிக்கும் சவால்களை மட்டும் மனிதனின் தொழில்நுட்பத்தால் அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த பூமியில் இயற்கை நமக்களித்த பல சிக்கல்கள் இன்றும் தீர்க்கப்படாதவையாகவே உள்ளன. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது தான் அறிவியல் ஆனால், இன்னும் அறிவியலால் கூட அறியப்படாத விஷயங்கள் இந்த உலகில் அதிகம் உள்ளன. அந்த விஷயங்கள் ஏன் நடக்கிறது? எதற்காக நடக்கிறது? என்று யாராலும் யோசிக்கவே முடியாது. இந்த உலகம் முழுவதும் மர்மங்களால் நிறைந்ததுள்ளது. மக்கள் எல்லோரும் தினந்தோறும் பல மர்மமான நிகழ்வுகளைக் கடந்து வருகின்றனர். சில மர்மங்களுக்கு விடை கிடைக்கிறது. சில மர்மங்களுக்கு பல நாட்கள் கழித்து விடை கிடைக்கிறது. ஆனாலும், சில மர்மங்களுக்கு இன்று வரையிலும் விடை கிடைப்பதேயில்லை. அதேபோல், பல ஆண்டுகளாகவே விடை தெரியாத விந்தையான பல்வேறு விதமான எண்ணற்ற மர்மங்களின் தொகுப்பே இந்தப் புத்தகம்.