மின்மினிகள் மாநாடு எனும் சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிடும் எனது பெயர் சி முத்தமிழ் செல்வம் நான் சென்னையில் பெருங்களத்தூர் பகுதியில் பிறந்து வளர்ந்து படித்து கொண்டிருக்கிறேன். எனது சொந்த ஊர் திருநெல்வேலி. நான் என்னுடைய பள்ளிப் படிப்பை சந்தோஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்னும் பள்ளியில் முடித்தேன். தற்போது என்னுடைய கல்லூரி இளங்கலை பொறியியல் படிப்பை படித்துக்கொண்டிருந்தேன் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். கூடவே எனது இயக்குனர் திரு இமாலயன் அவர்களிடம் உதவியை இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் அவர் வழங்கிய ஊக்கத்தில் மின்மினிகள் மாநாடு என்னும் இந்த சிறுகதை தொகுப்பை எழுதினேன் இதற்கு என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய இயக்குனர் திரு இமாலயன் அவர்களுக்கு நன்றி. என் பெற்றோர்கள் என் தம்பிகள் என்னுடன் பணியாற்றும் என் சக உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தை வடிவமைப்பு மற்றும் தட்டச்சு செய்து உதவிய அன்பு அண்ணன் பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.